விஜய்யை மிஞ்சிய சம்பவம்… மாணவியின் செயலால் கடுப்பான லோகேஷ் கனகராஜ்!

Author: Shree
20 July 2023, 1:07 pm
Quick Share

கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.

அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் திரிஷா, கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது.

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. எனவே படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேற்று கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள SNS தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு விருது வழங்கினார். அப்போது ஒரு மாணவி லோகேஷ் கனகராஜ் கையால் விருது வாங்கிக்கொண்டு அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க முயற்சித்தபோது ஒரு நிமிஷம் செம ஷாக் ஆன லோகேஷ் கனகராஜ் அந்த மாணவியை தூக்கிவிட்டு என்ன இதெல்லாம்? என்றவாறு முறைத்தார். இதே போல் விஜய்யும் கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவ, மாணவிகளை காலில் விழ விடாமல் தடுத்து நிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 492

0

0