லொள்ளு சபா புகழ் நடிகர் சேஷு காலமானார்.. இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்..!

Author: Vignesh
26 March 2024, 4:39 pm
seshu
Quick Share

விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் சேஷு. இவரை லொள்ளு சபா சேஷு என்றே பலர் அழைத்து வந்த நிலையில் ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். குறிப்பாக 90 s கிட்ஸ் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சேஷு. இவர் சந்தானம் நடிப்பில் வெளிவந்த ஏ1 படத்திற்கு பின்பு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

seshu

சமீபத்தில், வெளிவந்த வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் ஒரே ஒரு நடனமாடி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். மக்கள் மனதில் நகைச்சுவை நடிகராக இடம் பிடித்துள்ள நடிகர் சேஷு கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டதால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

lollu-sabha-actor-seshu

இந்த நிலையில், அப்போது அவருடைய இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை வழங்கும் வந்தது. இந்த நிலையில் சற்று முன் சேஷு காலமானார்.

Views: - 92

0

0