“மாமன்னன்” முதல் திரைவிமர்சனம்…. அந்த Scene-ல திரையரங்கமே அதிரப்போகுது – புகழ்ந்து தள்ளிய தனுஷ்!

Author: Shree
28 June 2023, 4:42 pm
mamannan review
Quick Share

இயக்குனர் மாரி செல்வராஜ் திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். வறட்சிகாலங்களில் இவரது தந்தை வெளியூர்களுக்குச் சென்று வேடமிட்டு தெருக்கூத்து ஆடியிருக்கிறார். அதன் தழுவலாகவே பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கினார்.

தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பாளி இயக்குனர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின்னர் இப்படத்தை இயக்கினார். முதல் படம் அவருக்கு பல விருதுகளை அள்ளிக்கொடுத்தது. பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவான இப்படத்தில் கதிர், ஆனந்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். 2018ம் ஆண்டு வெளியான இப்படம் ஒடுக்கப்பட்ட இனத்தையும் ஆதிக்க சாதியினரால் அவர்கள் படும் கொடுமைகளை குறித்தும் வெளியானது. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

maamannan vadivelu-updatenews360

அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி மீண்டும் மாபெரும் ஹிட் கொடுத்தார். இந்நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். நாளை இப்படம் வெளியாகிறது.

இந்நிலையில் மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். அதில், , “மாமன்னன் இயக்குனர் மாரி செல்வராஜின் எமோஷன். வடிவேலு சார் மற்றும் உதயநிதி, கீர்த்தி மற்றும் பகத் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் சாரின் இசை அழகாக இருந்தது. கண்டிப்பாக படத்தின் இடைவேளை காட்சியில் திரையரங்கம் அதிரும்” என கூறியுள்ளார். தனுஷின் இந்த பதிவிற்கு நன்றி கூறியுள்ள இயக்குனர் மாரி செல்வராஜ், “நன்றி சார்…. என் இதயத்தை இதமாக்கிவிட்டீர்கள். உங்களது இந்த பாராட்டுக்கு மிகுந்த நன்றி என கூறி பதிவிட்டுள்ளார். தனுஷின் இந்த பாசிட்டிவ் விமர்சனம் ரசிகர்களை படம் பார்க்க ஆர்வத்தை தூண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 289

0

0