100 நாட்களை தாண்டி ஓடிய 100வது படம்.. வெறுப்பில் தயாரிப்பு நிறுவனத்தையே மூடிய முன்னணி நடிகர்.. வெளியான காரணம்..!!

Author: Babu Lakshmanan
11 April 2023, 4:16 pm
Quick Share

80, 90களில் ஒருதிரைப்படம் 100 நாட்களைக் கடந்தால் தான் சூப்பர் ஹிட் என்றே கூறப்படும். ஆனால், இந்தக் காலத்தில் படம் 10 நாட்களை தாண்டி விட்டாலே, பிளாக்பஸ்டர் ஹிட் என்று சொல்லும் அளவுக்கு அனைத்து மாறிவிட்டது.

இப்படியிருக்கையில் தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கமல்ஹாசன். வயதானாலும் ரஜினிகாந்த்தை போன்று ஹீரோவாகவே நடித்து வரும் இவருக்கு, கடந்த சில ஆண்டுகளாக தோல்வி படங்களே மிஞ்சின. இப்படியிருக்கையில், இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வெளியான விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.

இந்த வெற்றியால் பூரித்துப் போன கமல் படத்தின் இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் கதாபாத்திரங்களுக்கு பரிசுகளை அள்ளிக் கொடுத்தார். விக்ரம் திரைப்படம் தனக்கு ஒரு நல்ல கம்பேக்காக அவர் எண்ணிக் கொண்டார்.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் 100வது திரைப்படமான ராஜபார்வை குறித்த ஒரு சுவாரசியமான தகவல் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 1981 ஆம் ஆண்டு இயக்குநர் சங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தை கமல் தயாரித்ததோடு மட்டுமில்லாமல், படத்தின் கதையும் கமலே எழுதியிருந்தார். இந்த படத்திற்கு இளையராஜாவின் இளையராஜா இசையமைத்திருந்தார்.

வசதியான குடும்பத்தில் பிறந்த ரகு (கமல்) தாயை இழந்து சித்தியின் கொடுமையை அனுபவித்து வருகிறார். பாட்டியின் ஆறுதலால் சகித்து கொண்டு வாழும் ரகுவின் பாட்டியும், அப்பாவும் ஒரு கட்டத்தில் இறந்து விடுகிறார்கள். பின்னர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரகு, தனது கண் பார்வையை இழக்கிறார். இதையடுத்து, அவரை சித்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார்.

இதனால், பார்வையற்றோர் பள்ளியில் சேரும் ரகு, மிகப்பெரிய வயலின் கலைஞராக வருகிறார். அந்த சமயத்தில் நாயகி நான்சி (மாதவி) உடன் காதல் ஏற்படுகிறது. ஆனால், மதப்பிரச்சனையால் இருவரின் காதலுக்கு நான்சியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இறுதியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

பட்டர்பிளைஸ் ஆர் ப்ளை, தி கிராஜுவேட் ஆகிய படங்களை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், இந்த படம் 100 நாட்களை கடந்து ஓடியது. இந்தப் படத்தின் 100 வது நாள் விழாவில் எம்ஜிஆர் கமலுக்கு பரிசு அளித்து இருந்தார். இந்த படத்தை கமல் தன்னுடைய சகோதரர்கள் சந்திரகாசன், சாருஹாசனுடன் இணைந்து ஹாசன் பிரதர்ஸ் என்று பெயரில் தயாரித்தார்.

100 நாட்கள் இந்தப் படம் ஓடியிருந்தாலும், விமர்சனரீதியாக ராஜபார்வை கொண்டாடப்பட்டாலும், அது தோல்வி படமாகவே கருதப்படுகிறது. படம் தோல்வி அடைந்ததால் 5 வருடங்கள் தனது தயாரிப்பு நிறுவனத்தை கமல்ஹாசன் மூடியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படம் வெளியாகி இதோடு 42 வருடங்கள் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 511

3

1