நந்தினி 2nd Time Pregnant-ஆ.. அக்யூஸ்ட் மாதிரி பாக்குறாங்களே என புலம்பும் கணவர்..!(வீடியோ)

Author: Vignesh
28 மார்ச் 2024, 4:32 மணி
myna nandhini
Quick Share

பிரபல சீரியல் நடிகையான மைனா நந்தினி விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானார். அதையடுத்து நிறைய சீரியல் வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க கொஞ்சம் கொஞ்சம் வளர துவங்கினார்.

myna nandhini-updatenews360

கூடவே திரைப்படங்கள், ரியாலிட்டி என முகம் காட்டி வந்தார். விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார். தமிழில் வெண்ணிலா கபடி குழு, வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

myna nandhini-updatenews360

இவர் 2017ஆம் ஆண்டு கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையால் அவர் தற்கொலை செய்து இறந்துவிட்டார். இதையடுத்து 2019 ஆம் ஆண்டு நடிகர் யோகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2020ஆம் ஆண்டு துருவ் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தொடர்ந்து திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இதனிடையே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். அந்நிகழ்ச்சியில் மைனா நந்தினியின் நடவடிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால், அதுவும் அவருக்கு நல்ல விளம்பரமாகவே அமைந்தது.

myna nandhini-updatenews360

இந்நிலையில், தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மைனா நந்தினி தன் கணவருடன் சேர்ந்து youtube சேனல் நடத்தி வருகிறார். இந்நிலையில், தான் இரண்டாம் முறை கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறி அவரது கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார். ஆனால், நான் இதை பிராங்க் செய்தேன் என்று மைனா நந்தினி கூறியதும் பெருமூச்சு விட்டிருக்கும் கணவரின் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

  • Ramadoss தீட்சிதர்கள் மட்டுமே விளையாட கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்!
  • Views: - 209

    0

    0