இனி வாய்ப்பிற்காக அதை பண்ண மாட்டேன்.. கறாராக தெரிவித்த நந்திதா ஸ்வேதா..!

Author: Vignesh
7 February 2024, 2:29 pm

நந்திதா, அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.

இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா. அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும் என மற்ற நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் யாஷிகா ஆனந்த் அவரை தொடர்ந்து பல நடிகைகள் இதேபோன்று Hot போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது நந்திதா ஸ்வேதா கவர்ச்சியான உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். இந்த ஹாட் போட்டோ பார்த்து நெட்டிசன்ஸ் என்னமா இது வாய்ப்புக்காக இப்படி மொத்த அழகையும் ஓப்பனா காட்ட ஆரம்பிச்சிட்டீங்க என விளாசித்தள்ளி இருந்தனர்.

nandita swetha - updatenews360

தற்போது, நந்திதா தமிழ்மொழி படங்களை தாண்டி தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதனிடையே, சமீபத்தில் நந்திதா ஸ்வேதா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் இப்போது வெப் தொடர் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறி இருக்கிறார். மேலும், பட வாய்ப்புக்காக இனி நான் ஹாரர் படங்களில் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறேன் என்று நந்திதா ஸ்வேதா தெரிவித்துள்ளார்.

  • Sivakarthikeyan Surya Connection 10 வருடம் கழித்து பாருங்க….சூர்யாவிடம் சவால் விட்ட சிவகார்த்திகேயன்..!
  • Views: - 370

    0

    0