நயன்தாரா செய்யும் அழிச்சாட்டியம்.. 10 பத்தாது.. இன்னும் ரெண்டு வேணும் அடம் பிடிக்கும் விக்கி..!

Author: Vignesh
1 January 2024, 3:30 pm
nayanthara
Quick Share

குடும்பத்தை சேர்ந்தவரான நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

nayanthara

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்.

nayanthara

இதனிடையே, சினிமா கை கொடுக்கும் வரை சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து பிசினஸ் பார்த்து வரும் நயன்தாரா. தற்போது, தயாரிப்பாளர்களை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கியும் வருகிறாராம். அந்த வகையில், மார்க்கெட்டே இல்லாத போதும் நயன்தாரா தன்னுடைய சம்பளத்தை 10 கோடியாக நிர்ணயத்திருக்கிறார்.

nayanthara-cover

நயன்தாரா என்ற பெயரை வைத்து படத்தை ஓட்டிவிடலாம் என தயாரிப்பாளர்களும் அவரை தேடி போகிறார்கள். நயன்தாராவுக்கு, இப்போது 10 பவுன்சிலர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருகிறார்கள். அவர்களுக்கு சம்பளம் நயன்தாரா தரப்பிலிருந்து கொடுப்பது கிடையாதாம். நயன்தாரா கூட இருக்கும் 10 பவுன்சிலர்கள் சம்பளம் தயாரிப்பாளர் தான் கொடுக்க வேண்டும்.

இதற்கென்று, தனியாக 2 கோடி ஆகிறது. நயன்தாராவை ஒரு படத்தில் நடிக்க வைக்க கிட்டத்தட்ட 12 கோடி தயாரிப்பாளர்கள் செலவு செய்ய வேண்டி வருகிறது. அதில், அவர் ஹோட்டலில் தங்கும் செலவு மேக்கப் ஹேர் ஸ்டைல் எல்லாம் தனித்தனியாக பணம் கொடுக்க வேண்டும்.

nayanthara

ஏற்கனவே, சமாளிக்க முடியாமல் தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இது போன்ற சமயத்தில் பெரிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறார் நயன்தாராவின் ஆசை கணவர் விக்னேஷ் சிவன். அதாவது, தன்னுடைய காதல் மனைவிக்காக இப்போது, 10 பவுன்சர்கள் போதாது இன்னும் இரண்டு பவுன்சர்கள் வேண்டும் என்று அடம் பிடித்து வருகிறாராம்.

Views: - 333

0

0