மீண்டும் அஜித்துடன் ஜோடியாக நடிக்கும் 39 வயது நடிகை.. சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

Author: Vignesh
23 May 2024, 6:55 pm

மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் சமீபத்தில் அஜித் குமார் கமிட்டாகி இருந்தார் . விடாமுயற்சி படத்தைத் தாண்டி குட் பேட் அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றியுள்ளது. இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தைக் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.


படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் அஜித் மூன்று முக பாவனையை கொடுத்தபடியுள்ளார். ஒன்று சாந்தமாகவும், ஒன்று சிரித்துக்கொண்டும் மற்றொன்று கோவமாக முக பாவனையில் காணப்படுகிறார்.

மேஜையில் துப்பாக்கிகள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர் தற்பொழுது ரசிகர்களுக்கு விருந்து அலளிக்கும் வகையில் இருக்கிறது. தற்பொழுது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.

படத்தை புஷா திரைப்படத்தை தயாரித்த மைத்த்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். அதன்படி ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குட் பேட் அக்லி படம் 2025 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: பல முறை சிவகார்த்திகேயனிடம் வாய்ப்பு கேட்டேன்… ஆனால், மேடையில் வருத்தப்பட்ட வடிவுக்கரசி..!

சமீபத்தில், குட் பேட் அக்லி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை பட குழு வெளியிட்டு இருந்தனர். இந்த போஸ்டர் 24 மணி நேரத்தில் 41 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டு மாபெரும் சாதனையும் படைத்தது. இந்த படத்தில், நடிக்க நடிகர் அஜித்துக்கு 165 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், சமீபத்தில் சண்டைக் காட்சிகளுடன் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் படத்தின் OTT உரிமை குறித்து சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தை பிரபல OTT நிறுவனமான Netflix 95 கோடி கொடுத்து வாங்கியுள்ளார்களாம். இதன் மூலம் படத்தின் பட்ஜெட்டில் கால்பங்கு படப்பிடிப்பின் போதே குட் பேட் அக்லீ திரைப்படம் வசூல் செய்துவிட்டது என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ajith-updatenews360

மேலும் படிக்க: அந்த விசயத்தில் நமீதாவை ஏமாற்றிய அஜித்.. 16 ஆண்டுகளுக்குப் பின் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!

இந்நிலையில், பில்லா, ஏகன், ஆரம்பம், விசுவாசம் ஆகிய படங்களில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்த நயன்தாரா. தற்போது, குட் பேட் அக்லி படத்தின் மூலமாக ஐந்தாவது முறையாக அஜித்துடன் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு நயன்தாராவிற்கு 10 கோடி சம்பளம் வழங்கப்படுகிறதாக கூறப்படுகிறது.

  • Bigg Boss பிக் பாஸ் பிரபலத்துக்கு வந்த ஆபாச வீடியோக்கள்… மர்மநபரின் போட்டோவை வெளியிட்டு புகார்!
  • Views: - 212

    0

    0