சிவகார்த்திகேயன் உதவியால் உயிர்பிழைத்த ஆஸ்கர் Award யானை!

Author: Shree
15 March 2023, 6:34 pm

தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் என்ற தமிழ் குறும்படத்திற்கு அண்மையில் ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த படம் யானை வளர்ப்பு குறித்து எடுக்கப்பட்டது. இதில் இடம்பெற்ற இரண்டு யானைகளில் ரகு என்ற யானை கடந்த 2017 ஆம் ஆண்டு ஓசூர் அருகே மீட்கப்பட்டிருந்தது. தாயை பிரிந்த இந்த குட்டி யானை நாய்களிடம் கடிபட்டு ரத்த காயங்களுடன் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது.

இதனை மீட்டெடுத்த வனத்துறையினர் உடல்நலம் குன்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் இந்த ரகு யானைக்கு காஸ்ட்லியான மருந்துகள் தேவைப்படும் படுவதாக கூறினார். அந்த சமயத்தில் சிவகார்த்திகேயன் விலங்குகளுக்கு உதவி செய்து வந்தார். ரகு குறித்து சிவகார்த்திகேயனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் சிவகார்த்திகேயன் அந்த யானை குட்டிக்கு தேவையான உதவியை செய்திருக்கிறார். பின் ரகு யானை கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி இயல்பு நிலைக்கு வந்து குறும்படத்தில் நடித்து ஆஸ்கர் அவார்ட் பெற்று கௌரவித்துள்ளது. இது தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!