‘என் வானிலே’.. ‘என் உயிர் நீதானே’.. பாடலுக்கு உயிர்கொடுத்த பாடகி ஜென்சி பாடுவதை நிறுத்தியதற்கு இது தான் காரணமாம்..!

Author: Vignesh
31 December 2022, 11:45 am
playback-singer-jency - updatenews360
Quick Share

சினிமாவை பொறுத்தவரை நடிகர்களை சில சமயங்களில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் சில சமயம் அதே தலைகீழாக மாறும். ஆனால் பாடல்களை பொறுத்தவரை குரல் வலம் இருந்தால் போதும் எல்லா காலத்திலும் அவர்கள் மின்னிக்கொண்டே இருப்பார்கள். அதே போல பாடல் பாடுவதற்கு வயதே கிடையாது. சொல்லபோனால் எஸ் ஜானகி, சித்ரா, எல் ஆர் ஈஸ்வரி போன்றவர்கள் இன்றும் பாடல்களை பாடிக்கொண்டுதான் வருகின்றனர்.

playback-singer-jency - updatenews360

ஆனாலும் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த சில நடிகர்களும், பாடகிகளும் பின்னாளில் இருந்த இடம் தெரியாமல் போய் விடுகிறார்கள். அந்த வகையில் 1980ஸ் களில் தன்னுடைய குரலின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டவர் பாடகி ஜென்சி. இவர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். சிறு வயதில் இருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்டவர். தொடக்கத்தில் மலையாள சினிமாவில் தேசுதாஸுடன் இணைந்து பாடியிருக்கிறார்.

இளையராஜாவுடனான கூட்டணி :

பின்னர் சென்சியின் குரல் வளத்தை பார்த்த தேசுதாஸ் தமிழ் சினிமாவில் அப்போது கொடிகட்டி பறந்து கொண்டிருந்த இசைஞானி இளையராஜாவிடம் இவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். பின்னர் இளையராஜாவுடடன் இணைந்து 1978 தொங்கி 1982 வரை பல பாடல்கள் பாடியுள்ளார். அவற்றில் ஜானி படத்தில் “என் வானிலே” பாடல், முள்ளும் மலரும் படத்தில் “அடி பெண்ணே” பாடல், ப்ரியா படத்தில் “என்னுயிர் நீதானே” என்ற பாடல், பின்னர் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் “காதல் ஓவியம்” போன்ற தமிழ் சினிமாவில் ஹிட் அடித்த பல பாடல்களை பாடியுள்ளார்.

playback-singer-jency - updatenews360

தந்தையில் மறுப்பு :

இந்த நிலையில் இவர் பாடிய பாடல் ஹிட்டான நிலையில் கேரளாவை விட்டு சென்னை வந்தால் மிகப்பெரிய பாடகியாக வர வாய்ப்புண்டு எனக் கூறியிருக்கிறார் இளையராஜா. இதற்கு ஜென்சி தன்னுடைய அப்பாவிடம் கேட்டபோது அவர் சென்னை செல்ல மறுத்தால் இனிமேல் பாடுவதில்லை என முடிவு எடுத்ததாக சொல்லப்படுகிறது. அதற்கு பிறகு அவர் கேரளா மாநிலத்தில் இசை ஆசிரியராக பணியாற்றி வந்தாராம். மேலும் தமிழ் சினிமாவில் பி.சசிலா, ஜானகி போன்ற பல பாடகிகள் இருக்கும் போது நமக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும் என்று பாடுவதை நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

சித்ரா லட்சமணன் கூறியது :

ஆனால் தன்னுடைய குரலுக்கு தமிழ்நாட்டில் அதிக ரசிகர்கள் இறுகிறார்கள் என்று தெரியாதாம். அதோடு கேரளா மாநிலத்தில் 1980ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமா கேரளா மாநிலத்தில் திரையிடாத காரணத்தினால் அவர் பாடல் பாடிய படங்களை கூட பார்த்ததில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சமீபத்தில் ஒரு வீடியோவில் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் இந்த காரணங்களினால் தான் ஜென்சி பாடவில்லை என்று கூறுவது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறியிருந்தார்.

playback-singer-jency - updatenews360

மேலும் சென்சி பாடப்போவதில்லை என்று கூறப்பட்ட போது அது உம்மைதான என ஏன்? எந்த இசையமைப்பாளரும் கேட்கவில்லை. அவர் வெகுதொலைவில் எல்லாம் இல்லை கேரளா மாநிலத்தில் கொச்சியில் தான் வசித்து வருகிறார். இதனை பார்க்கும்போது வேண்டுமென்றே இவரின் வளர்ச்சியை தமிழ் சினிமாவில் கெடுக்க ஓரம்கட்டியிருக்கின்றனர் என்று தெரிகிறது. ஆனால் இதனை ஜென்சி புரிந்து கொள்ளாமல் இருந்தது தான் வேடிக்கையாக இருக்கிறது என்று அந்த வீடியோவில் கூறியிருந்தார் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.

Views: - 687

2

3