ஓணம் அதுவும் சிம்பு பட நடிகைக்கு ரூட்டு விட்ட முரட்டு சிங்கிள் நடிகர்.. கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..!

Author: Vignesh
29 August 2023, 1:45 pm
simbu updatenews360
Quick Share

பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் அவர்களது மகனும் பிரபல நடிகருமான பிரேம்ஜி நிறைய தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சிம்பு மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான வல்லவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், இதனைத் தொடர்ந்து, சென்னை 600 028, சரோஜா, கோவா, மங்காத்தா உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலம் அடைந்தார்.

‘என்ன கொடுமை சார் இது? , எவ்வளவோ பண்ணிட்டோம்.. இத பண்ண மாட்டோமா?’ உள்ளிட்ட டயலாக்குகள் மூலம் இவர் பேமஸ். திரைப்படங்கள், வெப் சீரீஸ் உள்ளிட்டவைகளில் நடித்து வரும் இவர், சில பாடல்களும் பாடியுள்ளார். இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவருக்கு வயது 40-ஐ கடந்த விட்ட போதிலும், இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே வலம் வந்துகொண்டிருக்கிறார்.

பேட்டிகளிலும் திருமணம் நடக்கும் போது நடக்கும் என கூலாக பதிலளித்து வருகிறார் பிரேம்ஜி. இந்நிலையில், சரக்கு பார்ட்டி என்று தன்னுடைய நண்பருடன் நாட்களைக் கழித்து இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து நடிகர்களின் புகைப்படங்களுக்கு ஹார்ட்டின் விட்டு வருகிறார் பிரேம்ஜி. மாநாடு படத்தில் கதாநாயகியாக, நடித்த கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட ஓணம் சோலை புகைப்படத்திற்கு வழக்கம் போல் ஹார்டின் விட்டு ரிப்ளை செய்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 271

0

0