போதும் அண்ணே இதோட நிறுத்திக்கலாம்.. 4 வருட சண்டை ஓவர்… சீமானுக்கு சமாதான புறா விட்ட லாரன்ஸ்..!

Author: Vignesh
30 August 2023, 12:28 pm

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் நாம் தமிழர் கட்சியை கடுமையாக சாடி இருந்தார். அதற்கு நாம் தமிழர் கட்சியினரும் கடுமையான விமர்சனத்தை முன்வைக்க இருதரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் அப்போது ஏற்பட்டது.

seeman ragawalawrence - updatenews360

இதன் காரணமாக ராகவா லாரன்ஸ் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் குறித்தும் சீமான் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இது முடிந்து 4 ஆண்டுகளான நிலையிலும், இரு தரப்பும் தற்போது முரண்பாடான நிலையே கடைப்பிடித்து வந்தனர். இதனிடையே கடந்த வாரம் ரஜினி யோகி ஆதித்யநாத் சந்திப்பு குறித்து பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்தது, பலரும் ரஜினிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இடமும் கேள்வி எழுப்பப்பட்டது.

seeman ragawalawrence - updatenews360

அதற்கு பதில் அளித்தவர் ரஜினிகாந்த் அமைதியை விரும்பி இமயமலை செல்கிறார் என்றும், யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் விழுந்தது அவரது சொந்த விருப்பம் என தெரிவித்தார். மேலும், அவரை தொல்லை செய்யக்கூடாது எனது கூறிய சீமான் ரஜினிகாந்த் காலில் விழுந்து விட்டதால் வெங்காய விலை ஏறிவிட்டதா என ஆதரவு தெரிவித்து பேசி இருந்தார்.

seeman ragawalawrence - updatenews360

இந்த வீடியோவை தன்னுடைய twitter பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகவா லாரன்ஸ் அதில் அண்ணன் சீமானுக்கு நன்றிகள் என பதிவிட்டு ரஜினிகாந்த்துக்கு எதிராக நீங்கள் பேசியதால்தான் தானும் தங்களுக்கு எதிராக பேசினேன் என முந்தைய விவகாரத்தை குறிப்பிட்டார். மேலும், சீமான் ரஜினி குறித்து அன்பாக பேசியிருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டி அதே அன்புடன் தானும் சீமானை நேரில் சந்திக்க வருகிறேன் என குறிப்பிட்டு அண்ணன் சீமானுக்கு மீண்டும் நன்றிகள் என பதிவிட்டு உள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?