சூப்பர் ஸ்டாரின் படுதோல்வியை 5 ஸ்டார் ஹோட்டலில் பார்ட்டி வைத்து கொண்டாடிய பிரபல வாரிசு நடிகர்..!
Author: Vignesh18 November 2022, 10:00 am
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து இன்று வரை அந்த இடத்தினை தக்கவைத்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். தன்னுடைய ஸ்டைலிஷான நடிப்பால் மக்கள் மத்தியில் நிலைத்து இருக்கும் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.
ரஜினிக்கு பின் யார் சூப்பர் ஸ்டார் என்ற கேள்வி பல போட்டியும் கேள்வியும் எழுந்து வருகிறது. அந்த இடத்தினை பிடிக்க டாப் நடிகர் போட்டியிடுகிறார் என்ற செய்திகளும் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் ரஜினி காந்த் தோல்வியையே கொண்டாடியவர் அந்த டாப் நடிகர் என்று பிரபல விமர்சகர் செய்யாறு பாலு கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் நடிப்பில் 2002ல் வெளியான படம் பாபா. அப்படம் வெளியாகி படுதோல்வியடைந்தது.
இதனை கொண்டாட டாப் நடிகர் அப்பாவுடன் இணைந்து 5 ஸ்டார் ஓட்டலில் சினிமா நட்சத்திரங்களுக்கு பார்ட்டி வைத்து கொண்டாடியிருக்கிறாராம். இப்பவும் இந்த கலாச்சாரம் சினிமாவில் நடந்து கொண்டிருக்கிறது.
அதேபோல் தான் அடுத்த 2005 ஆம் ஆண்டு அந்த நடிகரின் படம் படுதோல்வியை அடைந்து சரிகட்டியது. இதனை ஈடுகட்ட சந்திரமுகி படம் சூப்பர் ஹிட் அடுத்து சூப்பர் ஸ்டாருக்கு தூக்கி கொடுத்தது என்று கூறியுள்ளார்.
ரஜினி ரசிகன் என்று சொல்லி கொண்டு சினிமாவிற்க்கு வந்து பின் பாபா பட தோல்வியை விடிய விடிய பார்டி வைத்து கொண்டாடிய @actorvijay & SAC
இன்று மகன் பேர குழந்தைகள் இருந்தும் அநாதையாக SAC
உலகளவில் troll செய்யபடும் நடிகராக விஜய்
This is called கர்மா#Rajinikanth #Vijay #Thalaivar pic.twitter.com/CSmWOk5OEK— பூரியார் ¶¶¶|||•• செவிட்டு தவளை ••|||¶¶¶ (@Imtweetygoose) November 13, 2022
0
0