ராஷ்மிகா ஒரு வழியா கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க.. ஆமாங்க அவருக்கும் எனக்கும் அது நடந்துடுச்சு..!

Author: Vignesh
18 November 2023, 6:30 pm
Quick Share

இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.

rashmika mandanna -updatenews360

தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.

ஆம், இவர்கள் இவரும் சேர்ந்து 2018ம் ஆண்டில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் இந்திய சினிமா அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து ராஷ்மிகாவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிய துவங்கியது. தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து இந்தி திரைப்படத்திலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.

அண்மையில் ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாச வீடியோவாக வெளிவந்து பேரதிர்ச்சி கொடுத்தது. இச்சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இச்சம்பவம் பூதாகரமாக வெடித்து டெல்லி போலீசார் சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்து துரித விசாரணை நடத்தி வருகின்றனர்.

rashmika mandanna

முன்னதாக, தற்போது பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் அனிமல் படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். அப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள். அந்தவகையில் மூத்த நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி இந்நிகழ்ச்சிக்கு நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா மற்றும் அப்படத்தின் இயக்குனர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது ராஷ்மிகாவை, விஜய் தேவரகொண்டாவுக்கு கால் செய்து பேசும்படி பாலைய்யா கூறியிருக்கிறார்.

உடனே கால் செய்த ராஷ்மிகாவின் அழைப்பை ஏற்ற விஜய் தேவரகொண்டா, What’s up rey என்று செல்லமாக கூறியுள்ளார். உடனே ராஷ்மிகா வெக்கத்தில் பூரிப்படைந்துள்ளார். அவரின் இந்த ரியாக்ஷனை பார்த்து ஒருவேலை காதல் உண்மைத்தானா அப்போ அதெல்லாம் நடந்துருச்சா என்று கூறி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

  • maniratnam ஐஸ்வர்யா ராயை கணவருடன் சேர்த்து வைக்கும் மணிரத்தினம் – ஓஹோஹ் விஷயம் அப்படி போகுதா?
  • Views: - 307

    0

    0