ராஷ்மிகாவின் ஆபாச வீடியோ விவகாரம்: மகளிர் ஆணையம் கடும் நடவடிக்கை!

Author: Shree
10 November 2023, 6:23 pm
rashmika
Quick Share

இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.

rashmika mandanna

தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.

ஆம், இவர்கள் இவரும் சேர்ந்து 2018ம் ஆண்டில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் இந்திய சினிமா அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து ராஷ்மிகாவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிய துவங்கியது. தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து இந்தி திரைப்படத்திலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.

அண்மையில் ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாச வீடியோவாக வெளிவந்து பேரதிர்ச்சி கொடுத்தது. இச்சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இது குறித்து அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். இப்படியான நேரத்தில் இந்த வீடியோ வெளியிட்ட நபர் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என டெல்லி மகளீர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Views: - 241

0

0