பயில்வான் செத்தா நான் பட்டாசு வெடிச்சு கொண்டாடுவேன் – பிரபல நடிகை பகிரங்க பேட்டி!

Author: Shree
28 மே 2023, 11:36 காலை
bayilvan
Quick Share

தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். அதனால் சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை பேசி வருகிறார்.

மேலும், இவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருவதால் சினிமா நட்சத்திரங்களைப் பற்றி அறியாத பல ரகசியங்களை தன்னுடைய பத்திரிக்கையின் மூலம் வெளியிட்டு வருகிறார். மேலும், இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து உள்ளார்.

அந்த வகையில், இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் நடித்த ரேகா நாயர் பற்றி கொச்சையாக விமர்சனம் செய்து இருந்தார். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற நடிகை ரேகா, வாக்கிங் சென்று கொண்டிருந்த பயில்வானை மடக்கிப் பிடித்து அடிக்க பாய்ந்தார். இதனால் மிரண்டு போன பயில்வான் விட்டால் போதும் என, அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இவர்களுக்கிடையேயானா இந்த மோதலை தொடந்து, ரேகா நாயர் ஒரு பேட்டியில் பயில்வானை வெளுத்து வாங்கி உள்ளார்.

அதாவது, பயில்வான் செத்தா நான் பட்டாசு வெடிச்சு கொணடாடுவேன். அன்றைய நாள் எனக்கு தீபாவளி. என் வாழ்க்கையில் இதுவரை நன் பட்டாசு வெடித்ததே இல்லை. ஆனால், பயில்வான் செத்தால் நரகாசுரன் செத்ததாக நினைந்து பட்டாசு வெடித்து கொண்டாடுவேன்.அவரை அடிக்க சென்றதை பல நடிகைகள் எனக்கு போன் செய்து எனக்கு வாழ்த்தினார்கள். அந்த அளவிற்கு அவன் பலரது சாபங்களை பெற்றிருக்கிறான் என பகிரங்கமாக பேசினார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 455

    0

    0