தெறிக்கவிட்ட சாய்பல்லவி.. மிரண்டு போன சமந்தா.. ட்ரெண்டாகும் வீடியோ..!

Author: Vignesh
21 February 2024, 4:56 pm
sai pallavi samantha
Quick Share

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா தற்ப்போது பாலிவுட் படங்களில் கூட கவனம் செலுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா.

samantha

சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

samantha - updatenews360

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள்.

samantha - updatenews360

இதனிடையே சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். நோய்த்தொற்றின் தாக்கத்தினால் உடல் ரீதியாக அவர் நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக அவ்வப்போது அவரே கூறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த சமந்தா திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

sai pallavi samantha

இந்நிலையில், சமந்தா மற்றும் சாய் பல்லவி பற்றிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, நடனத்தில் சாய்பல்லவி நம்பர் ஒன் என்று நாம் அறிவோம். இவர் பல மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அப்படி சாய்பல்லவி போட்டியாளராக கலந்து கொண்ட நடன நிகழ்ச்சி ஒன்றில் சமந்தா சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார். அப்போது, சாய்பல்லவியின் நடனத்தை பார்த்து அசந்து போன சமந்தா அவர் மீது வைத்த கண்ணை எடுக்கவே முடியவில்லை அப்படி ஒரு நடனத்தை மேடையில் அரங்கேற்றினார் சாய்பல்லவி என சமந்தா பெருமையாக பேசி இருந்தார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 148

0

0