மாஸ் வில்லனுடன் நேருக்கு நேர் மோதப்போகும் அஜித்… விடாமுயற்சி படத்தின் வேற லெவல் அப்டேட்!

Author: Shree
31 August 2023, 5:02 pm
vidamuyarchi
Quick Share

அஜித் தற்போது பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.

இப்படம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்களாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர். படத்தை மகிழ் திருமேனி தான் இயக்குகிறாரா?என்பதே பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. பின்னர் அஜித்தின் பிறந்தநாள் அன்று AK 62 டைட்டில் நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

sanjay dutt-updatenews360

அதன் பின்னர் படத்தை குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. காரணம் இப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்றது. இந்த கேப்பில் அஜித், ” நீங்க எல்லாத்தையும் சரி செய்து வையுங்கள் நான் அதற்குள் வேர்ல்டு ரூர் போய்ட்டு வந்திடுறேன் என கிளம்பிவிட்டார். இதனால் படத்தின் ஷட்டிங் ஆரம்பிப்பார்களா? இல்லையா என சந்தேகம் எழுந்து வந்த நிலையில் சமீபத்தில் தான் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனர் ஆன லைக்கா சுபாஸ்கரன் விரைவில் விடாமுயற்சி படம் ஆரம்பிக்கவுள்ளோம் என கூறி ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தினார்.

இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம். சஞ்சய் தத் தற்போது விஜய்யின் லியோ படத்தில் வில்லனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 785

5

3