மகன் பிறந்து பல வருடங்கள் கழித்து… பிரபல சீரியல் நடிகையின் வீட்டில் விஷேசம்.. என்னன்னு தெரியுமா?

Author: Vignesh
1 July 2023, 2:30 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்த வருபவர் காயத்ரி யுவராஜ். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ளார், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார்.

gayathri yuvaraj - updatenews360

பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், மொட்டை மாடி போட்டோ ஷூட்டில் எடுத்த இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் BP-யை எகிற வைத்துள்ளது.

gayathri yuvaraj - updatenews360

சீரியல்களில் வில்லியாக கலக்கி வந்த காயத்ரி யுவராஜ் இணையதளங்களில் சேலைகளில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் அவ்வப்போது பதிவிடுவார்.

நடன இயக்குனரான யுவராஜ் என்பவரை திருமணம் செய்த காயத்திற்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், தற்போது காயத்ரி யுவராஜ் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக இணையதளத்தில் அறிவித்துள்ளார். இதனை அடுத்து இவரது ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?