STAR நடிகரா இருந்தாலும் நியாயம் வேண்டாமா? பட்ஜெட்டையே சம்பளமாக வாங்கிய ஷாருக்கான் – பதறிப்போன அட்லீ!

Author: Shree
20 April 2023, 2:49 pm
alee
Quick Share

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. இவர் ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் கொடுக்க இளம் வெற்றி இயக்குனராக வலம் வந்தார். அதை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர் என்ற இடத்தை பிடித்தார். தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

pathan

இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வருகிற ஜூன் 2 ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்கு ஷாருக்கான் நாளுக்கு நாள் சம்பத்தை ஏற்றி கேட்கிறாராம். கடைசியாக நடித்த பதான் படத்திற்கு ஷாருக்கான் ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்.
அதன் பட்ஜெட் ரூ. 225 கோடி தான்.

ஆனால், படம் வெளியான பிறகு ஹிட் அடித்து வசூல் வாரி குவிந்ததால் அவர் கேட்டதை விட அதிக சம்பளம் கொடுத்ததாம் தயாரிப்பு நிறுவனம். இது பாலிவுட்டில் டாப் அந்தஸ்த்தில் இருக்கும் மற்ற நடிகர்களை மட்டுமல்லாது ஜவான் பட தயாரிப்பாளரையும் கொஞ்சம் நடுங்க வைத்துள்ளது. இதனால் அட்லீ கொஞ்சம் பயத்தில் இருக்கிறாராம். இவ்வளவு முதலீடு போட்டு படம் எடுக்கிறார்கள் காப்பியடிச்சான் வேலை செஞ்சா கூர்கன்ஸ் கூறுபோட்டுடுவாங்களே என நடுங்கி வேலை செய்து வருகிறாராம்.

Views: - 544

1

3