அந்த படத்தில் ஜெனிலியாவிற்கு பதிலாக நடிக்கவிருந்தது இவங்களா.. நல்லவேளை நடிக்கல…!(வீடியோ)

Author: Vignesh
29 March 2024, 6:24 pm
Genelia-D’souza-looks-like-sunshine-in-a-bright-yellow-ballroom-gown-at-IIFA-2022-5
Quick Share

ஜெனிலியா டிசௌசா, தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர். சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து மீண்டும் பாலிவுட்டில் படங்களில் நடிக்க தொடங்கினார்.

அப்போது பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் ஜெனிலியாவிற்கும் இடையே காதல் மலர, கடந்த 2012ஆம் ஆண்டு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இவர் தமிழில் கடைசியாக தளபதி விஜய்யுடன் ‘வேலாயுதம்’ படத்தில் நடித்திருந்தார். இவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் நடிப்பதில் இருந்து விலகியிருந்த ஜெனிலியா பின்னர் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

siddharth-updatenews360

இந்நிலையில், பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கிய எல்லா படங்களுமே ரசிகர்களிடையே, பெரிய அளவில் ரீச் கொடுத்துள்ளது. அப்படி, அவரது இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தில் சித்தார்த், நகுல், தமன், பரத், மணிகண்டன் மற்றும் ஜெனிலியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க அவர்களுடன் விவேக் அவர்களுக்கு நல்ல கதாபாத்திரம் இருந்தது. நட்பு, காதல், வயது கோளாறு, பிரிவு, அலட்சியம் என இளைஞர்களின் ஒட்டுமொத்த எமோஷனையும் இந்த படத்தில் காட்டி இருப்பார்.

boys - updatenews360

இந்த படத்திற்கு, ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். பாய்ஸ் திரைப்படத்தில் அனைத்து பாடல்களும் செம ஹிட். பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது என்றே சொல்லலாம். இந்த படத்தில் நடித்தவர்களின் சினிமா பயணத்தில் ஒரு முக்கிய ஆரம்ப படமாக அமைந்தது என்று சொன்னால், மிகை ஆகாது. அப்படித்தான் பாய்ஸ் படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்ட ஜெனிலியாவிற்கு பதிலாக முதலில் தேர்வானவர் நடிகை வரலட்சுமி தானம்.

varalakshmi - updatenews360

சித்தார்த் மற்றும் வரலட்சுமியை வைத்து சங்கர் அவர்கள் போட்டோஷூட் எல்லாம் நடத்தி விட்டாராம். ஆனால், அந்த நேரத்தில் சரத்குமார், வரலட்சுமியை நடிக்க கூடாது என்று முட்டுக்கட்டை போட்டு விட்டாராம். இதனை பார்த்த ரசிகர்கள் நல்லவேளை அந்த படத்துல நீங்க நடிக்கல, உங்க அப்பா வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்று கருத்துக்களில் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 112

0

0