இரவு பார்ட்டியில் ஸ்ருதி ஹாசனுடன் பிரபல இயக்குனர்.. இது நல்லதுக்கு இல்லங்க என நெட்டிசன்கள் அட்வைஸ்..!

Author: Vignesh
27 March 2024, 4:45 pm
shruti haasan - updatenews360
Quick Share

கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.

lokesh kanagaraj-updatenews360

அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. லியோ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில், படங்களில் பிஸியாக நடித்து வரும் சுருதிஹாசன் கமலுடன் இணைந்து இசை ஆல்பம் ஒன்றில் பணியாற்றி உள்ளதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிப்பு வெளியானது. அதை கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், கடந்த மாதம் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் போஸ்டர் ஒன்றை கமலின் ராஜ் கமல் நிறுவனம் வெளியிட்டது.

இதனை தொடர்ந்து, சுருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் இந்த ஆல்பத்திற்கு “இனிமேல்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கடந்த 14ஆம் தேதி கமலின் ராஜ் கமல் நிறுவனம் தெரிவித்தது. மேலும், இந்த ஆல்பத்திற்கு சுருதிஹாசன் இசையமைக்க கமலஹாசன் வரிகள் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆல்பத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். இதன் மூலம் நடிகராக லோகேஷ் கனகராஜ் அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில், ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் புதிய அப்டேட் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆல்பத்தின் பாடலின் முழு வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இரவு பார்ட்டி ஒன்றில் ஸ்ருதி ஹாசனுடன் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இது நல்லதுக்கு இல்லங்க என நெட்டிசன்கள் அட்வைஸ கொடுத்து வருகின்றனர்.

Views: - 102

0

0