பாடகிக்கு சீர் வரிசை கொடுத்த சிவாஜி… ரியல் லைஃப் பாசமலர் கதை கொஞ்சம் கேளுங்க!

Author: Rajesh
22 February 2024, 8:17 pm
Quick Share

சிவாஜி கணேசன் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும். ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், 1952 இல் பி. ஏ. பெருமாள் முதலியார் என்பவர் தயாரித்த பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

வித விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடிப்பது இவரின் தனி திறனாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 288 படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன்.

நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி, சிம்மக்குரலோன் என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்படுகின்றார். நீண்ட வசனங்களை எளிதில் உள்வாங்கிக் கொண்டு அதை உணர்ச்சிபூர்வமாக திரையில் பிரதிபலிக்கும் ஆற்றல் இவருக்கு இயல்பாகவே இருந்தது.

சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதை வென்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன். 1960 இல் எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க -ஆசிய திரைப்பட விழாவில் அந்த விருது வழங்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் பத்ம ஸ்ரீ, பத்ம பூசன் மற்றும் திரைப்பட துறையின் உயரிய விருதான தாதாசாஹெப் பால்கே விருது போன்ற விருதுகளை வென்றுள்ளார். மேலும் இவர் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது பெற்ற முதல் இந்திய நடிகரும் ஆவார்.

நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர், நடிப்பு பல்கலைக்கழகம் என்றும் போற்றப்படும் சிவாஜி கணேசன் சரித்திரம், புராணம் , குடும்பம், சமூகம் போன்ற அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று அதில் திறம்பட நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் பாசம், ஏமாற்றம், குடும்பம், பிரிவு என மிகவும் எமோஷனலான கதாபாத்திரங்களில் கருத்து பேசி அழுதுக்கொண்டே நடிப்பது இவருக்கே உரித்தான திறமை.

இந்நிலையில் சிவாஜி கணேசன் நிஜ வாழ்க்கையிலும் பாசமலர் கதை போன்று நடந்துக்கொண்ட விஷயம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. அதாவது மும்பையை சேர்ந்த பாடகி லதா மங்கேஷ்கர் பாடல்கள் பாடுவதற்கு சென்னைக்கு வரும்போதெல்லாம் தங்குவதற்கு சரியான இடம் இல்லாமல் திண்டாடுவாராம்.

அப்படி ஒரு முறை தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருந்த சிவாஜி கணேசனை பார்த்த அவர் சென்னைக்கு வந்தால் தங்குவதற்கு ஒரு இடம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். உடனடியாக சிவாஜி தன்னுடைய சொந்த வீட்டிலேயே ஒரு அறையை நல்ல வசதிகளுடன் ஏற்பாடு செய்துகொடுத்தாராம். அதன் பிறகு லதா மங்கேஷ்கர் எப்போதெல்லாம் சென்னைக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் சிவாஜி வீட்டில் தான் தங்குவாராம்.

பொங்கல், தீபாவளிக்கெல்லாம் சிவாஜி கூட பிறந்த தங்கைபோன்று அவருக்கு சீர் வரிசையெல்லாம் கொடுத்து அனுப்புவாராம். அதேபோல் லதாவும் சென்னைக்கு வந்தால் சிவாஜியின் குழந்தைகளுக்கு ஏராளமான கிஃப்ட்கள், சாக்லேட்டுகளை வாங்கிவருவாராம். திரைத்துறையை சேர்ந்த சக கலைஞர்களை சிவாஜி அவ்வளவு மரியாதையாக நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 223

1

0