விக்ரமுடன் மோதும் நடிப்பு அரக்கன்.. சியான் 62-வில் டைரக்டர் போட்ட பக்கா ஸ்கெட்ச்..!

Author: Vignesh
10 February 2024, 4:41 pm
vikram
Quick Share

படத்திற்கு படம் வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகர் என பெயரெடுத்தவர் நடிகர் விக்ரம். இவர் தமிழில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்து வருகிறார். என் காதல் கண்மணி படத்தின் மூலம் 1990ல் அறிமுகமானார்.

அதன் பின்னர் தொடர்ந்து பல தோல்வி படங்களில் நடித்து துவண்டுபோன விக்ரமுக்கு சேது படம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பின்னர் காசி, ஜெமினி, தூள், பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

vikram

படத்திற்கு படம் தனது முழு உழைப்பை போட்டு திறமையான நடிப்பை வெளிப்படுத்தி அந்த படத்திற்காக தனது இயக்குனர் எப்படி கேட்கிறாரோ அப்படி உடலை வருத்தி திறமையான நடிகராக பார்க்கப்படுபவர் விக்ரம். திரைத்துறையில் போட்டிகள் பொறாமைகள் இன்றி ஜீரோ ஹேட்டர்ஸ் என்ற பெயரெடுத்திருக்கிறார்.

vikram-updatenews360

பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்ததாக விக்ரம் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் தங்கலான் இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, விக்ரம் தற்போது தன்னுடைய 62வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை அருண்குமார் இயக்கி வருகிறார். இவர் இதற்கு முன் இயக்கிய சித்தர் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அருண்குமார் இயக்கத்தில் சீயான் 68 படத்தின் அறிவிப்பு வீடியோ கூட சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சீயான் 62 படம் குறித்து தற்போது மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்து வருவதாகவும், தமிழ் சினிமாவில் தற்போது நடிப்பு அரக்கன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் எஸ்.கே.சூர்யா ஒருபுறம் நடிப்பு என்று வந்துவிட்டால் எதை வேண்டுமானாலும் செய்ய துணிந்து நிற்கும் விக்ரம் என இப்படத்தில் இணைந்துள்ளனர்.

இதனால் சீயான் 62 படத்தின் மீது அளவு கடந்த எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்து வருகிறது. முதன்முறையாக இணைந்துள்ள இந்த காம்போ எந்த அளவிற்கு மக்கள் வரவேற்பை பெறப்போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Views: - 238

0

0