பிரபல நடிகரை செருப்பால் அடித்த சோனியா அகர்வால்.. வெளியான பல வருட ரகசியம்..!

Author: Vignesh
22 December 2023, 3:15 pm
sonia agarwal
Quick Share

தமிழ் சினிமாவின் முத்தான இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. இத்திரைப்படத்தில் ரவி கிருஷ்ணன் நடித்திருந்தார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த பாடல்கள் தான்.

இதில் சோனியா அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார். படத்தில் இவரது நடிப்பு இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. வேலையில்லாமல் நண்பர்களுடன் சுற்றித்திரியும் இளைஞனான ரவி கிருஷ்ணா அவர் தங்கியிருக்கும் குடியிருப்பு-க்கு குடிவரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணான சோனியா அகர்வாலை காதலிக்கிறார். ஆரம்பத்தில் காதலை மறுத்த சோனியா அகர்வால் பின்னர் காதலிப்பார்.

7 g rainbow colony

ஆனால், வீட்டில் வேறொரு மாப்பிள்ளையை பார்த்திடுவார்கள். கடைசியில் அந்த திருமணம் எப்படி நின்றது. ஹீரோ ஹீரோயினை எப்படி கரம்பிடித்தார் என்பது கதை. சூப்பர் அடித்த இப்படம் 19 ஆண்டுகள் ஆகியும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அண்மையில் இப்படம் ரீ ரிலீஸ் ஆகியது.

7 g rainbow colony

இந்நிலையில் தற்போது 7ஜி ரெயின்போ காலனி படம் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தின் கதாநாயகன் ரவி கிருஷ்ணா பேட்டி ஒன்றில் பங்கேற்றபோது, அந்தப் படத்தில் நடந்த ஒரு சம்பவத்தை தெரிவித்துள்ளார். அதாவது, பஸ்ஸில் பிரேக் பிடிக்க சோனியா அகர்வால் மீது ரவிகிருஷ்ணா கைவைத்துவிடுவார். இதனால், ஆத்திரம் அடைந்த சோனியா அகர்வால் கோபத்துடன் செருப்பை கழட்டி அடிப்பார்.

7 g rainbow colony

இந்த கட்சியை படமாக்கும் போது நிஜமாகவே ரவி கிருஷ்ணாவை செருப்பால் அடிக்கச் சொல்லி இருக்கிறார் செல்வராகவன். இந்த காட்சியை ஒரே டேக்கில் சோனியா அகர்வால் முடித்துவிட்டார். இல்லை என்றால் பலமுறை செருப்பால் அடி வாங்கி இருப்பேன் என்று ரவி கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

Views: - 261

0

0