அம்மா போட்டோவுக்கு வந்த தப்பான கமெண்ட்.. அப்செட் ஆன பிக் பாஸ் பிரபலத்தின் மகன்..!

Author: Vignesh
17 May 2024, 2:52 pm
bigg boss maheshwari
Quick Share

தமிழ் சினிமாவின் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவரான விஜே மகேஸ்வரி ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி பிரபலம் ஆகினார். அதன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் தேடி வந்தது. விக்ரம், மகான், சாணி காகிதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவரது ரோல் பிரபலமானதாக பார்க்கப்பட்டது. தொடர்ந்து கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்துக்கொண்டே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இதனிடையே இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டு மக்களிடையே பேமஸ் ஆனார்.

தற்போது 36 வயதாகும் மகேஸ்வரி திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்பது அனைவரும் அறிந்ததே. இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். கணவரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்ந்து வரும் மகேஸ்வரி தற்போது தனது இரண்டாம் திருமண ஆசை குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதாவது, “எனக்கும் சில தேவைகள் இருக்கு. ஆனால் இரண்டாம் திருமணம் செய்துக்கொள்ள மிகவும் பயமாக இருக்கிறது. காரணம்,வருகிற நபர் எனக்கு கணவராக இருப்பார். ஆனால், அவர் என் மகனுக்கு அப்பாவாக மாறக்கூடிய மனநிலையில் இருப்பாரா? இதெல்லாம் உண்மையிலே நடக்குமா? என்ற பயம் எனக்கு இருக்கிறது.

மேலும் படிக்க: துளி கூட Makeup இல்லாமல் இருக்கும் ரம்யாகிருஷ்ணன்.. என்ன அழகு டா; இவங்களுக்கு 53 வயதா?.. (Video)

ஏனென்றால், என் மகன் என்னை நம்பி தான் இருக்கிறான். என்னை மறுமணம் செய்துக்கொள்ள இரண்டு பேர் கேட்டார்கள். திருமணம் செய்துக்கொள்ள விருப்பத்தையும் தெரிவித்தார்கள்.ஆனால் ஏற்கனவே என் திருமணம் தோல்வியில் முடிந்துவிட்டதால் மறுமணம் என்பது சரியாக வருமா?என பெரும் குழப்பம் மனதில் உள்ளதாக அவர் கூறினார்.

vj-maheswari

மேலும் படிக்க: கோடி ரூபாய் கொடுத்தாலும் NO.. இந்த விஷயத்தில் கறார் காட்டும் சாய் பல்லவி..!

மேலும், சமீபத்தில் VJ மகேஸ்வரி தனது மகன் கேசவ்வுடன் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, அவர்களிடம் சமூக வலைதளங்களில் வரும் தவறான கருத்துக்கள் குறித்தும் கமெண்ட்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில், அளித்த அவரது மகன் கேசவ் தன்னுடைய அம்மா பதிவிட்ட புகைப்படத்திற்கு மோசமான கமெண்ட் இருக்கும். முதலில், அதையெல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதை எல்லாம், தாண்டி என் பாட்டி பார்த்துவிட்டு இங்கு பாரு இப்படி கமெண்ட்கள் பண்ணி இருக்காங்க என்று சொல்லுவாங்க, அதுக்கு நான் கமெண்ட்லாம் பாக்காதீங்க, அதை எல்லாம் விட்டுருங்க என்று பாட்டியிடம் சொல்லி விடுவேன் என்று மகன் தெரிவித்து இருந்தார்.

Views: - 131

0

0