வாரிசு நடிகருடன் அட்ஜஸ்ட்மென்ட்?.. மார்க்கெட்டை இழந்து குமுறிய ஸ்ரீதிவ்யா..!

Author: Vignesh
8 November 2023, 5:30 pm
sridivya
Quick Share

தமிழ் சினிமாவில் ஹோம்லி நடிகையாக அறிமுகமாகி ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசப்படுத்தியவர் நடிகை ஸ்ரீ திவ்யா. இவர் குழந்தை நட்சத்திரமாக மூன்று வயதில் தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.

தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக பிரபலமான ஸ்ரீ திவ்யா 2010 ஆண்டு ரவி பாபு இயக்கிய மனசார எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் பிளாப் ஆனதால் பிறகு 2012 இல் மாருதி இயக்கிய “பஸ் ஸ்டாப்” படத்தில் பிரின்சுடன் இணைந்து நடித்த இப்படமானது, வெற்றி அடைந்தது.

sridivya-shalu-sammu-updatenews360

அதன் பின்னர் தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன் உடன் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானர். முதல் படத்திலே அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு இளைஞர்களின் பேவரைட் ஹீரோயினாக இடம் பிடித்தார்.

பிறகு பென்சில் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்தார்.மேலும் ஈட்டி, காக்கி சட்டை மற்றும் வெள்ளைக்கார துரை படங்களிலும் நடித்துள்ளார். நல்ல பீக்கில் இருந்தபோது அம்மணி சினிமா வாழ்க்கையை தானே அழித்துக்கொண்டார்.

Sri Divya-updatenews360

ஆம், கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இமான் அண்ணாச்சி கிரகபிரவேசதில் ஓவராக மது அருந்திவிட்டு தலைகால் புரியாமல் மதுபோதையில் முகம் சுளிக்கப்படி மோசமாக ஆட்டம் போட்டுள்ளார். அங்கிருந்த பலர் எடுத்து கூறியும் கேட்காத ஸ்ரீ திவ்யாவின் போதை தெளியவைத்து பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

sri divya- updatenews360

இந்த செய்தி காட்டுத்தீயாக பரவி கோலிவுட் சினிமா ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார். இதனால் அவருக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. அவரும் சில ஆண்டுகள் வாய்ப்பு தேடி அலைத்துள்ளார். பின்னர் போட்டோ ஷூட் நடத்தியும் பார்த்தார் ஆனால் ஒன்னும் வேலைக்கு ஆகவில்லை. இதனால் சொந்த கிராமத்திற்கு பொட்டி படுக்கையுடன் சென்று ஆடு , மாடு, கோழி என சிம்பிளான கிராமத்து வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், ஸ்ரீதிவ்யா குறித்து ஒரு செய்தி சினிமா வட்டாரங்களில் முணுமுணுக்கப்படுகிறது. அதாவது, ஸ்ரீதிவ்யாவை வாரிசு நடிகர் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்ததாகவும், ஆனால் அதற்கு ஸ்ரீவித்யா மறுத்துவிட்டதாகவும், கோபத்தில் அந்த வாரிசு நடிகர் ஸ்ரீவித்யா குறித்து பொய்யான விஷயங்களை கூறி மார்க்கெட்டை காலி செய்து விட்டாராம். இதனால் மன உளைச்சல் அடைந்த இவர் தனது சொந்த ஊரிலே சில வருடங்கள் செட்டாகி விட்டாராம்.

இதையடுத்து, ஸ்ரீதிவ்யாவிற்கு சுத்தமாகவே பட வாய்ப்பு கிடைக்காமல் போனதாகவும், பல வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த ஸ்ரீதிவ்யா தற்போது, விக்ரம் பிரபுவுடன் ரைடு படத்தில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 246

0

0