அந்த இடத்தில் சர்ஜரியா.. அப்போ எல்லாமே டம்மியா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. கொந்தளித்த பிரபல நடிகை..!

Author: Vignesh
16 February 2023, 7:30 pm
vani bhojan - updatenews360.jpg 2
Quick Share

‘நாக்க மூக்க’, ‘உனக்கென நான் எனக்கென நீ’ போன்ற பாடல்களை ரசிகர்கள் அத்தனை எளிதில் மறக்க முடியாது. பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்த பாடல்கள் அவை. காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் தான் நடிகை சுனைனா அறிமுகமானார். படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி பெரிதும் ரசிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் காதலிக்கவும் செய்தார்கள். பிறகு, மீண்டும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர்.

sunaina - updatenews360

Sun Pictures புண்ணியத்தில் அந்த படம் சுமாராக ஓடியது. ஆனால் அந்த படங்களை அடுத்து சுனைனாவும், நகுலும் இணைந்து நடிக்கவில்லை. சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சில்லு கருப்பட்டி திரைப்படம் கடந்த 2019 வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் பல வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

sunaina - updatenews360

அதில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. எப்பவாவது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அப்லோட் செய்யும் இவர், புடவை அணிந்து தேவதை போல இருக்கும் அவரது புகைப்படங்கள் சிலது இணையத்தில் காட்டு தீயாக பரவியது.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேல் சுனைனா தமிழ் சினிமாவில் நடித்தும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெறமுடியாத வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறார். நடிகை சுனைனாவை அறிமுகமாகிய போது சுனைனா மூக்கில் சர்ஜரி செய்த செய்தி வெளியானது.

sunaina - updatenews360

இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன்னைப்பற்றிய காமெடியான வதந்தி என்ன என்று கேள்விக்கு பதிலளித்த அவர், நான் லண்டன் சென்று மூக்கில் சர்ஜரி செய்தேன் என்ற செய்தி குறித்து பலர் என்னிடம் மூக்கில் எதாவது பண்ணீங்களா? மூக்கு மாறிவிட்டதே என்று கேட்டனர். ஆனால் அப்படி ஒன்றும் நான் செய்யவில்லை என்று கூறிவிட்டேன் என நடிகை சுனைனா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Views: - 570

1

1