அந்த ஒரு விஷயத்திற்கு பஹத் பாசில் ரொம்ப பயப்படுவாராம் – என்னனு சொல்லவா? ஷாக் ஆகிடாதீங்க!

Author: Shree
30 July 2023, 8:36 pm
fahadh faasil
Quick Share

மலையாள படங்களின் மாஸ் ஹீரோவான நடிகர் ஃபகத் பாசில் மிகவும் டெடிகேஷனான நடிகர் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்று தான். தன் தந்தையின் அறிமுகத்துடன் சினிமாவில் வந்த இவர் படத்திற்கு படம் புது வித்தியாசமாய் நடிப்பில் மிரள வைத்தார். எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதை நன்றாக உள்வாங்கி மிகச்சிறப்பாக நடித்து பெயர் வாங்குவார்.

நடிப்பு அரக்கனாக இவரை பார்த்து மிரண்டுபோனார்கள் சக மலையாள நடிகர்கள். தமிழில் கூட சூப்பர் டீலக்ஸ், வேலைக்காரன், புஷ்பா, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது மாமன்னன் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் பஹத் பாசில் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு, பஹத் பாசில் தமிழ் திரைப்படங்களின் விழாக்களில் கலந்துக்கொள்ள தவிர்ப்பது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பஹத் பாசிலுக்கு தமிழ் நன்றாக பேச வராது.

அதனால் தான் அவர் நடிக்கும் தமிழ் திரைப்படங்களின் விழாக்களுக்கே கலந்துக்கொள்வதில்லை. அவரே பேட்டி ஒன்றில், எனக்கு துல்கர் சல்மான் போன்று சரியாக தமிழ் சரியாக பேச வராது. நான் வந்து எதாவது வார்த்தை தவறாக பேசிவிட்டால். அது ஏதேனும் சர்ச்சை ஆகிடுமோ என்ற பயம் அதனால் தான் நான் தமிழ் பட நிகழ்ச்சிகளை தவிர்க்கிறேன் என கூறினார். தமிழ் படங்களில் கொடூர வில்லனாக மிரட்டும் பகத்துக்கு தமிழ் பேச பயமா? என ரசிகர்கள் செம ஷாக் ஆகிவிட்டார்கள்.

Views: - 438

0

0