யார் படமா இருந்தாலும் அதுல நான் பெருசா தெரியணும்…. கமலுக்கே செக் வைத்த ஃபஹத் பாசில்!

Author: Shree
30 July 2023, 8:06 pm
vikram movie
Quick Share

மலையாள படங்களின் மாஸ் ஹீரோவான நடிகர் ஃபகத் பாசில் மிகவும் டெடிகேஷனான நடிகர் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்று தான். தன் தந்தையின் அறிமுகத்துடன் சினிமாவில் வந்த இவர் படத்திற்கு படம் புது வித்தியாசமாய் நடிப்பில் மிரள வைத்தார். எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதை நன்றாக உளவாங்கி மிகச்சிறப்பாக நடித்து பெயர் வாங்குவார்.

நடிப்பு அரக்கனாக இவரை பார்த்து மிரண்டுபோனார்கள் சக மலையாள நடிகர்கள். தமிழில் கூட சூப்பர் டீலக்ஸ், வேலைக்காரன், புஷ்பா, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது மாமன்னன் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் பஹத் பாசில் கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ள பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு, ” விக்ரம் படத்தில் கமிட்டாகுவதற்கு முன் பஹத் பாசில் இதில் கமல் ஹாசன் ஹீரோ என்பதால் தனக்கு பெரிதாக ஸ்கோப் இருக்காது என நினைத்துவிட்டாராம்.

படத்தின் கதையை லோகேஷ் கனகராஜ் சொல்வதற்கு முன்னே, ” நான் கமல் ஹாசனின் தீவிர ரசிகன் தான். இருந்தாலும் இந்த படத்தில் என்னுடைய ரோல் அழுத்தமானதாக இருந்தால் தான் நான் நடிப்பேன். தயவு இதை கமல் சாரிடம் சொல்லிவிடாதீர்கள் என கூறினாராம். பின்னர் முழு கதையை கேட்டுவிட்டு செம ஷாக் ஆகிவிட்டாராம். ஏங்க இதுக்கு கமல் சார் ஓகே சொன்னாரா என கேட்டாராம். காரணம் படத்தின் பாதி கதையில் பஹத் பாசில் தான் வருவார். அதை கேட்டு அவரே ஷாக் ஆகி நம்பமுடியாமல் இருந்தார் என செய்யாறு பாலு கூறியுள்ளார்.

Views: - 600

1

0