‘பரியேறும் பெருமாள்’ – நாய், ‘கர்ணன்’ – கழுதை, ‘மாமன்னன்’ – ‘பன்றி’ – படத்திற்கு படம் வித்யாசம் காட்டும் மாரி செல்வராஜ்!

Author: Shree
23 May 2023, 3:59 pm
pariyerum perumal
Quick Share

இயக்குனர் மாரி செல்வராஜ் திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். வறட்சிகாலங்களில் இவரது தந்தை வெளியூர்களுக்குச் சென்று வேடமிட்டு தெருக்கூத்து ஆடியிருக்கிறார். அதன் தழுவலாகவே பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கினார்.

தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பாளி இயக்குனர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின்னர் இப்படத்தை இயக்கினார். முதல் படம் அவருக்கு பல விருதுகளை அள்ளிக்கொடுத்தது. பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவான இப்படத்தில் கதிர், ஆனந்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். 2018ம் ஆண்டு வெளியான இப்படம் ஒடுக்கப்பட்ட இனத்தையும் ஆதிக்க சாதியினரால் அவர்கள் படும் கொடுமைகளை குறித்தும் வெளியானது. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி மீண்டும் மாபெரும் ஹிட் கொடுத்தார். இந்நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தில் இடப்பெற்ற ’ராசா கண்ணு’ என்ற பாடல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில் மாரி செல்வராஜ் படங்களில் பெரும்பாலும் விலங்குகளை பயன்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. பரியேறும் பெருமாள் படத்தில் கறுப்பி என்ற நாய், கர்ணனில் யானை, கழுதை போன்ற பல மிருகங்கள், தற்போது மாமன்னன் படத்தின் பன்றி எனத்தொடர்ச்சியாக மிருகங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. இது குறித்து கேட்டதற்கு,

” விலங்குகள் உடன் உண்மையான எமோஷ்னல் இருந்தால் நிச்சயம் அந்த காட்சி எல்லோருக்கும் புரியும். பரியேறும் பெருமாளின் கறுப்பி மூலம் தான் என்னுடைய சினிமாவையே நான் கண்டுபிடித்தேன். எந்த மாதிரியான படங்களை எடுக்கலாம் என்று இதன் மூலம் தான் நான் கண்டுபிடித்தேன். எழுத்துக்கும் இயக்கத்திற்கும் உள்ள வேறுபாட்டையும் நான் உணர்ந்தேன். இதையே என்னுடைய அடுத்த படமான கர்ணனில் தொடர்ந்தேன் என்று கூறியிருந்தார். இப்போது மாமன்னன் படத்திலும் தொடர்கிறது.

Views: - 513

0

0