மெண்டல் டார்ச்சர் கொடுக்கறாங்க.. பொய் கேஸ் போடுறாங்க : ராஜ்கிரண் குறித்து அடுக்கடுக்கான புகார் : வளர்ப்பு மகள் கண்ணீர் வேண்டுகோள்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 December 2022, 4:56 pm
Rajkiran Daughter - Updatenews360
Quick Share

சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் முனீஸ் ராஜா. தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் நடித்து வருகிறார்.

இவர், திரைப்பட நடிகரான ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் ராஜ்கிரண் இவர்களுடைய திருமணத்திற்கு பிறகு எனக்கும் இவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. என்னுடைய பெயரை பயன்படுத்தி இவர்கள் யாரிடமும் எந்த ஒரு பயனும் பெறக் கூடாது.

அது போல தன்னுடைய பெயரை கெடுக்கும் விதமாகவும் இவர்கள் நடந்து கொள்ளக் கூடாது என்று ஒரு பெரிய விளக்கத்தையும், அறிக்கையையும் வெளியிட்டு இருந்தார்.

அதற்குப் பிறகு நடிகர் ராஜ்கிரணின் கருத்து எல்லாமே பொய் என்று சொல்லும் விதமாகத்தான் நடிகர் முனீஸ் ராஜா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு, தன்னுடைய மனைவிக்கு புதியதாக தொழில் தொடங்கி கொடுத்திருப்பதாகவும், புது வீடு கட்டிக்கொண்டு வருவதாகவும் அதற்கான கிரகப்பிரவேசம் விரைவில் இருக்கும் என்றும் அதில் ரசிகர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த பலர் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் கூறி வந்த நிலையில், பலர் இது ராஜ்கிரணை வம்பிழுக்கும் வகையில் அவரை சீண்டிப் பார்க்கும் விதமாகவும் அவர் சொன்னது எல்லாம் பொய் என்று சொல்லும் விதமாக இவர் நடந்து கொள்வதாக காட்டி வருகிறார் என்று இரண்டு விதமாக கருத்துக்கள் வெளியாகி வந்தது.

இந்த நிலையில் இன்று பிரியா ஒரு வீடியோவே வெளியிட்டு இருக்கிறார். அதில், நான் பிரியா, முனீஸ் ராஜா என்னோட கல்யாணம் உங்களுக்கு எல்லாருக்கும் தெரியும்.

எல்லாம் மீடியாவிலும் வந்தது. இப்போ என்னோட பெத்த தாய் பத்ம ஜோதி என்ற கதீஜா ராஜ்கிரண். இவர் ராஜ்கிரண் சார் தூண்டுதலின் பெயரில் என்னை பெத்த தாய் கதீஜா ராஜ்கிரண் என் மீது பொய் புகார் கொடுத்திருக்கிறார்.

அதாவது என்னுடைய கல்யாணம் முடிந்த பிறகு youtube-ல் ஆள் வைத்து நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை போடுவது, அப்புறம் போனில் என்னை மெண்டல் டார்ச்சர் பண்ணுவது அப்புறம் தெரிஞ்சவங்க, ரொம்ப பெரியவங்க கிட்ட எல்லாம் என்னை பத்தி தப்பா சொல்றது. இந்த மாதிரி தொடர்ந்து பண்ணிக்கிட்டே இருந்தாங்க.

இந்த மாதிரி பண்ணாதீங்க என்று நான் சொல்லி இருந்தேன். அதுபோல என்னுடைய நகைகள் அந்த வீட்டில் இருந்தது. என்னுடைய நகைகள் என்றால், என்னுடைய அப்பா எனக்கு கொடுத்தது. என்னுடைய ரிலேஷன் எனக்கு கொடுத்தது .அது அங்கே இருந்தது. அதை நான் திரும்ப கேட்டுருந்தேன்.

அதுமட்டுமல்லாமல் சில நாட்களுக்கு முன்பு என்னுடைய அப்பாவை பார்த்து எனக்கு சப்போர்ட் பண்ணுங்க அப்பா என்று நான் கேட்டிருந்தேன். அவங்க சரி என்று சொன்னதற்காக அவர் மீதும், ஃபாரினில் இருக்கும் என்னுடைய தம்பியின் மீதும், இதற்கு எதுவும் சம்பந்தமில்லாத என்னுடைய கணவர் மீது புகார் கொடுத்திருக்காங்க.

நான் காவல் நிலையத்திற்கு போகிறேன். சம்மனுக்கு ஆஜராக போறேன். சம்மனுக்கு ஆஜர் ஆகிட்டு பிரஸ் மீட்டிங் வைப்பதற்கு தயாராக இருக்கிறேன்.

இந்த விஷயம் எல்லாம் உங்க எல்லாருக்கும் தெரியணும். உங்கள் எல்லாருடைய ஆதரவும் எனக்கு வேணும். எனக்கு நியாயம் கிடைக்கணும்.

உங்க எல்லாருடைய சப்போர்ட்டும் எனக்கு கிடைக்க வேண்டும் என்று இவர் படபடப்பாக பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதைக் குறித்து ராஜ்கிரண் தரப்பில் இருந்து எந்த பதிலும் கூறப்படாத நிலையில் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Views: - 198

0

1