பீக்கில் இருந்தபோதே சறுக்கிய சினிமா வாழ்க்கை… பீல்டு அவுட் ஆனதுக்கு காரணம் இதுதான் !

Author: Rajesh
19 January 2024, 8:23 pm
mumtaz
Quick Share

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விடுவார்கள் அந்த வகையில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் தான் நடிகை மும்தாஜ். இவர் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் தன்னை ஒரு நடிகையாக காட்டிக் கொண்டார் இவருக்கு பட வாய்ப்பும் கிடைத்தது.

போகப்போக சரியான பட வாய்ப்பு கிடைக்காததால் தன்னை ஒரு கவர்ச்சி நடிகையாக மாற்றிக் கொண்டார் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியாகிய மோனிசா என் மோனலிசா என்ற திரைப்படத்தில் மோனிஷா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து உனக்காக எல்லாம் உனக்காக, பட்ஜெட் பத்மநாபன், குஷி, லூட்டி சொன்னால்தான் காதலா, ஸ்டார், வேதம் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்து வந்தார் அதிலும் விஜய்யுடன் குஷி திரைப்படத்தில் கட்டிப்புடி கட்டிப்புடி என்ற பாடலுக்கு நடனமாடி இளசுகளை ஒரு வழி செய்துவிடுவார். இந்தப்பாடல் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இதனிடையே, நடிகை மும்தாஜ் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார்.

mumtaz

இந்நிலையில் மும்தாஜ் சினிமாவில் இருந்து ஏன் காணாமல் போனார் என்ற காரணத்தை பயில்வான் கூறி இருக்கிறார்.அதாவது, மிகப்பெரிய இஸ்லாமிய தொழிலதிபர் ஒருவருடன் உறவு வைத்திருந்த மும்தாஜ் சினிமாவில் பீக்கில் இருந்தபோதே அவரை திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்தார். ஆனால், அந்த நபர் சினிமாவில் நடிக்கவே கூடாது என கூற மும்தாஜும் பணத்திற்கு ஆசைப்பட்டு அதற்கு ஒப்புக்கொண்டார். அதனால் தான் அவரின் சினிமா வாழ்க்கை பாதாள குழியில் விழுந்துவிட்டது என பயில்வான் கூறியுள்ளார்.

Views: - 249

0

0