மாடியில் இருந்து குதித்து துணிவு பட நடிகர் தற்கொலை… அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்..!!

Author: Babu Lakshmanan
27 January 2023, 7:13 pm
Quick Share

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் துணிவு. மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர், அமீர், பாவனி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் அஜித்தின் ஸ்டைலும், கெட்டப்பும் செம மாஸாக இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேவேளையில், துணிவு படத்தில் இடம் பெற்றுள்ள ஜில்லா ஜில்லா, காசேதான் கடவுளடா, கேங்கஸ்டா ஆகிய பாடல்கள் ரசிகர்களை தொடர்ந்து vibe செய்ய வைத்து வருகிறது.

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் திரையுலகில் அஜித் – விஜய் திரைப்படங்கள் ஒன்றாக வெளியானாலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கும். அப்படி இருந்தும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது துணிவு திரைப்படம்.

thunivu-updatenews360 3

இந்த நிலையில் இந்தத் திரைப்படத்தில் நடித்தவர்களில் டான்ஸர் ரமேஷும் ஒருவராவார். ஜெயிலர் படத்திலும் ரஜினியுடன் நடனமாடியுள்ளார். தனது நடனத்தின் மூலம் டிக்டாக்கில் பிரபலமான இவர், துணிவு படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர், கேபி பார்க் பகுதியில் உள்ள குடியிருப்பின் அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர், மதுபோதையில் இருந்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எதற்காக இவர் தற்கொலை செய்தார்..? அல்லது வேறு ஏதேனும் அசம்பாவீதம் நடந்துள்ளதா..? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Views: - 151

1

0