இந்த குட்டி பாப்பா யாருன்னு தெரியுதா? இவங்க தான் தமிழ், மலையாளம் என கலக்கிய ஹீரோயின்..!

Author: Vignesh
20 March 2024, 6:47 pm
bhavana
Quick Share

பொதுவாக சினிமா நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில், ட்ரென்ட் ஆகும். உச்ச நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் நிறைய வெளியாகிவிட்டது. ஆனால், அவர்களையும் தாண்டி நிறைய பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை நாம் பார்த்திருக்க மாட்டோம்.

அந்தவகையில், பிரபல நடிகையின் சிறு வயது புகைப்படம் தற்போது, வெளியாகி உள்ளது. இந்த நடிகை தமிழ், மலையாளம் என ஹிட் படத்தை கொடுக்க, அடுத்தடுத்து டாப் நடிகர்களின் படங்களில் கமிட் ஆகி வந்தார்.

கேரளாவை சேர்ந்த இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். தமிழில், ஒரு சில படங்களிலே நடித்துள்ள இவர் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார். சினிமா பயணத்தின் போது ஒரு பெரிய பிரச்சினையில் சிக்கியிருந்தார்.

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவனா இவர் வெயில், தீபாவளி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள். மனதில் இடம் பிடித்தார் இவர் அஜித்துடன் கடைசியாக அசல் படத்திலும் நடித்திருந்தார்.

பின்பு நீண்ட வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை மலையாளம் கன்னட படங்களில் நடித்து வரும் இவர் கடந்த வருடம் தான் காதலித்து வந்த நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், திருமணத்திற்கு பிறகு இவர் சமீபகாலமாக அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில், தற்போது மளமளவென 12 கிலோ எடையை குறைத்து இளம் ஹீரோயின்களுக்கே சவால் விடும் அழகு தேவதையாக மாறியுள்ளார்.

bhavana-updatenews360

மீடியாவில் இருந்து ஒதுங்கியே இருந்த இவர் சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் பக்கம் தலைகாட்டுகிறார்.அந்த வகையில், இவரது சிறுவயது புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

bhavana
Views: - 125

0

0