பின் வாங்குகிறதா வாரிசு? துணிவு படத்துடன் வெளியாகும் என அறிவித்த நிலையில் விஜய் தரப்பு திடீர் ஆலோசனை!!

Author: Udayachandran RadhaKrishnan
8 November 2022, 6:43 pm
Vijay Ajith - Updatenews360
Quick Share

‘பீஸ்ட்’ படத்திற்கு பிறகு விஜய், இயக்குநர் வம்சியுடன் கைகோத்திருக்கிறார். தமிழ் – தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகும் ‘வாரிசு’ படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடிக்கிறார்.

இரண்டு தரப்பு ஆடியன்ஸ்களை திருப்திபடுத்தும் வகையில் படம் உருவாகியுள்ளதாக படத்தின் இயக்குநர் வம்சி தெரிவித்துள்ளார். விஜய்யை பொறுத்தவரை அவருக்கான பலமே அவரது ரசிகர்கள். அதைத்தாண்டி ஃபேமிலி ஆடியன்ஸ். ஆரம்ப காலக்கட்டத்தில் விஜய்க்கு துணையாக நின்றதும் அவர்கள்தான்.

அப்படிப்பார்க்கும்போது நீண்ட காலமாக ஃபேமிலி ஆடியன்ஸை மையப்படுத்திய படம் விஜய்யிடமிருந்து மிஸ்ஸிங்! அந்த ஏக்கத்தை பூர்த்தி செய்து ‘குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி’ என்ற வாசகத்துக்கு பொருத்தமாக படமாக ‘வாரிசு’ படத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். படம் பொங்கலுக்கு வெளியாவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘வலிமை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத்துடன் கைகோத்திருக்கிறார் நடிகர் அஜித். வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்டு பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ‘துணிவு’ படம். ஆரம்பத்தில் படம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், படப்பிடிப்பின் தாமதத்தால் பொங்கலுக்கு ரெடியாகியுள்ளது ‘துணிவு’.

வரும் பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் துணிவு ஆகிய 2 படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது. இதனால் இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்த நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் தலைமையில், பனையூரில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மக்கள் இயக்க வளர்ச்சி பணிகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தாலும், வாரிசு படமும், துணிவு படமும் ஒரே நாளில் திரைக்கு வரும் நிலையில் இந்த போட்டியை சமாளித்து, இதில் வெற்றி பெற என்னென்ன செய்யலாம் என்பது குறித்தே இந்த ஆலோசனை கூட்டம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

Views: - 1003

11

4