பிரபல நடிகருடனான லிவிங் ரிலேஷன்ஷிப்? மனம் திறந்த வாணி போஜன்..!

Author: Vignesh
21 September 2023, 4:00 pm
vani bhojan-updatenews360
Quick Share

சீரியல் நடிகையாக மக்கள் மனதை கவர்ந்தவர் நடிகை வாணி போஜன். இவர் ஏற்கனவே கிங்ஃபிஷர் ஏர்லைன்சில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் இந்த துறைக்கு வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது கெரியரை ஆரம்பித்தார். அதன் மூலம் கிடைத்தது தான் சீரியல் வாய்ப்புகள்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்தார். இதில் தெய்வமகள் சீரியல் அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

அதன் பின்னர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் மீரா அக்காவாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். அந்த படத்திற்கு பின்னர் இருவரும் நெருங்கிய நல்ல நண்பர்களாகவே பழகி வருகிறார். அதன் பின்னர் பாயும் ஒளி நீ எனக்கு, லவ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

vani bhojan-updatenews360

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் ஒரு நடிகையாக தான் சந்தித்த மோசமான அனுபவத்தை குறித்து வாணி போஜன் பேசியுள்ளார். அதில் அவர், புடவை கட்டி வந்தாலும் கூட தன்னுடைய போட்டோவை எப்படியாவது ஒரு சைட்டில் ஹாட் என்றுதான் போட்டு இருப்பார்கள். இன்ஸ்டாகிராமில் தான் முழுவதுமாக போர்த்திக் கொண்டாலும், கூட தேவை இல்லாத இடத்தில் அந்த மாதிரியான புகைப்படங்கள் இருக்கும்.

திரைப்படங்களில் வந்த போது கூட உடன் நடிக்கும் நடிகர்களோடு சேர்ந்து வாணி போஜன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என்று தான் சொல்வார்கள். பொண்ணுங்க வேலைக்கு போகும்போது என்னடா.. பொண்ணை சம்பாதிக்க வச்சு நீங்க சாப்பிடுறீங்களா? என்ற பேச்சும் இயல்பாக எழும். எனக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று மிகவும் யோசிப்பேன். அப்படி அந்த அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் நான் பெரிய நடிகையாக வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை என்று வாணி போஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Views: - 1711

16

9