அவங்க கூட Relationship-ல ஜோவிகா இருக்கா?.. விசித்ரா வெளியிட்ட உண்மை..!
Author: Vignesh15 November 2023, 10:39 am
பிக் பாஸ் 7 சீசன் பற்றி தான் தற்போது பெரிய பேச்சாக சமூக வலைதளங்களில் இருந்து வருகிறது. அதற்கு காரணம் ரெட் கார்டு கொடுக்கப்பட்ட பிரதீப் தான். பிரதீப்பின் வெளியேற்றம் எல்லை மீறி நடந்து கொண்டதாலும், பெண்களுக்கு வீட்டில் அவரால் பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தாலும் பலர் அளித்த புகாரின் பேரில் வெளியேற்றப்பட்டார். ஒருபுறம் பிரதீப்புக்கு ஆதரவான குரல்களும் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.
விசித்ராவை தாக்கி பேசும் அளவிற்கு மாயா கேங்கை கேள்வி கேட்பதில்லை என்று நெட்டிஷன்கள் விமர்சித்து வருகின்றனர். sunday எபிசோடில், கமல் மாயா கேப்டன்சி சரியில்லை என தாக்கி பேசி இருந்தார். அதனால், bully கேங் தற்போது சோகத்தில் இருக்கிறது.
தற்போது, முன்னனதாக, இந்த வாரத்தின் தலைவராக தினேஷ் இருந்து வரும் நிலையில், பிக் பாஸ் இல் புதிய புதிய டாஸ்க்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விசித்ரா மீண்டும் ஜோவிகா குறித்து பேசியுள்ளார். இதில், ஜோவிகா விஷத்தனமான நபர்களுடன் இருக்கின்றாள் என்று தினேஷிடம் தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் ஜோவிகா மற்றும் விசித்ரா இடையே சண்டை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.