செருப்பு இல்லாமல் நடந்தால்…. நயன்தாராவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி!

Author:
3 August 2024, 12:15 pm

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து அதன் பின்னர் ஹீரோவாக நடித்து மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றிருப்பவர் தான் விஜய் ஆண்டனி. தற்போது இவரது நடிப்பில் “மழை பிடிக்காத மனிதன்” என்ற திரைப்படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

vijay antony - updatenews360.png d

விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன்களில் கடந்து சில நாட்களாக விஜய் ஆண்டனி தொடர்ச்சியாக கலந்து கொண்டு வந்தார். குறிப்பாக இசை வெளியீட்டு விழா, செய்தியாளர் சந்திப்பு, பட ப்ரோமோஷன் , இப்படி அந்த திரைப்படத்தின் விழாவிற்கு சென்று தொடர்ச்சியாக பிரமோஷன் செய்து வந்தார்.

அப்போது செருப்பு இல்லாமலே காணப்பட்ட விஜய் ஆண்டனியிடம் தொகுப்பாளர் ஒருவர்…. ஏன் செருப்பு இல்லாமல் நடக்குறீங்க என்ற கேள்வி கேட்டதற்கு விஜய் ஆண்டனி… எனக்கு திடீரென செருப்பு இல்லாமல் நடக்க வேண்டும் என்று தோன்றியது. செருப்பு இல்லாமல் நடந்து பார்த்தேன். அது எனக்கு பிடித்திருந்தது அது மட்டும் இல்லாமல் எனக்குள் ஒரு மாற்றத்தை அது ஏற்படுத்தியது .

எனவே உங்கள் மனதிற்கு உத்வேகம் வேண்டுமா? மனம் சோர்வா இருக்கா? உங்களுக்கு ஏதேனும் மாற்றம் வேண்டுமா? அப்போ நிச்சயமா செருப்பு இல்லாமல் நடந்து பாருங்க? என்னைப் போன்றே உங்களுக்கும் ஏதேனும் மாற்றம் ஏற்படும் என கூறினார்.

விஜய் ஆண்டனியின் இந்த பேச்சு மருத்துவ ரீதியாக பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இதுகுறித்து கூறிய அவர் செருப்பு இல்லாமல் நடந்தால் அக்லோஸ்டோமோ குடற்புழுக்கள் ரத்தத்தை உறிஞ்சி ரத்த சோகையை உருவாக்கும் .

இந்த ரத்த சோகையால் பெண்கள், பச்சிளம் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பகால மரணம் தொடங்கி குழந்தைகள் மரணம் இந்த ரத்தசோகை கொண்டுவந்துவிடும்.

எனவே இதுபோன்ற உயிரை கொள்ளும் நோய்களில் இருந்து இருந்து தப்பிக்க செருப்பு அணிவது தான் சிறந்தது. எனவே சிலர் அரைகுறையாக எதையாவது தெரிந்து கொண்டு பேசுவதை நம்பி ரத்த சோகைக்கு ஆளாகாதீர்கள் என்று அந்த மருத்துவர் விஜய் ஆண்டனியை கடுமையாக சாடி உள்ளார். முன்னதாக நடிகை நயன்தாரா செம்பருத்தி டீ குறித்து கருத்து பேசி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடதக்கது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?