அண்டை மாநிலத்தில் களமிறங்கும் விஜய் மக்கள் இயக்கம்? விஜய்யுடன் முதலமைச்சர் திடீர் சந்திப்பால் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan4 February 2022, 9:24 pm
உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கி வெற்றி கண்ட விஜய் மக்கள் இயக்கம் அண்டை மாநில தேர்தலில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ஈசிஆர் தனியார் விடுதயில் நடிகர் விஜய்யை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திடீரென சந்தித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் விஜய், அரசியலுக்கு வருவாரா வரமாட்டரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தமிழகத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வேட்பாளராக களமிறங்கி வெற்றிக்கனிகளையும் பறித்தனர்.
சற்றும் எதிர்பாராத விஜய், தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட அனுமதி அளித்தார். மேலும் தனது படம் மற்றும் கொடிகளை பயன்படுத்த அனுமதியளித்தாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருந்தார்.
129 இடங்களல் கடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வெற்றி பெற்றது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களம் காண உள்ளது அரசியல் கட்சியினரிடையே கலக்கத்தை ஏறப்டுத்தியுள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, நடிகர் விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாகவே இருந்ததாக முதலமைச்சர் ரங்கசாமி தரப்பு தகவல் தெரிவித்துள்ளனர். புதுச்சேரியிலும் விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளதால் தேர்தலில் களமிறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றே சொல்லலாம். எது உண்மை என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் மக்களே…