மாணவர்கள் தேர்ந்தெடுப்பில் குளருபடி… விஜய் மீது அதிருப்தியில் பெற்றோர்கள்!

Author: Shree
17 June 2023, 10:08 am
vijay
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தன் அப்பா எஸ்ஏ சந்திர சேகரின் உதவியுடன் சினிமாவில் நுழைந்தார். ஆரம்பதில் பல கேலி,கிண்டலுக்கு ஆளான விஜய் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மெருகேற்றி திறமைகளை வளர்த்துக்கொண்டு தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இடத்தை பிடித்தார். குறிப்பாக இவரது நடிப்பு, கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ், டான்ஸ் உள்ளிட்டவை ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.

நடிப்பை தாண்டி விஜய் அரசியலில் சாதிக்க வேண்டும் என அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் பெரிதும் விரும்பினார். அதற்காக எஸ்.ஏ.சி ரசிகர் மன்றம் துவங்கினார். 90களின் ஆரம்ப காலங்களில் விஜய் நடிக்கத் தொடங்கிய நாளில் இருந்தே ரசிகர் மன்ற கொடியேற்றுவது, கொண்டாட்டங்கள் நடத்துவது என அனைத்தும் நடந்து கொண்டிருந்தது. அதற்கு தலைவராக இருந்தவரும் எஸ்.ஏ.சந்திரசேகர்தான்.

2009ஆம் ஆண்டு விஜய் ரசிகர் மன்றம், விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. இதில் மக்களுக்கு சேவை செய்தல், நலத்திட்டங்கள் வழங்குதல் உள்ளிட்ட நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது . அதையும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி. தான் செய்தார். விஜய் மக்கள் இயக்கத்தின் முழு கட்டுப்பாடுமே எஸ்.ஏ.சி கையில்தான் இருந்தது. ஆனால் நடிகர் விஜய் இதுகுறித்து வெளிப்படையாக ஏதும் பேசியது இல்லை.

2009ஆம் ஆண்டு விஜய் ரசிகர் மன்றம், விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. இதில் மக்களுக்கு சேவை செய்தல், நலத்திட்டங்கள் வழங்குதல் உள்ளிட்ட நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது . அதையும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி. தான் செய்தார். விஜய் மக்கள் இயக்கத்தின் முழு கட்டுப்பாடுமே எஸ்.ஏ.சி கையில்தான் இருந்தது. ஆனால் நடிகர் விஜய் இதுகுறித்து வெளிப்படையாக ஏதும் பேசியது இல்லை.

விஜய் மக்கள் இயக்கம் கலைந்தது ஏன்?

பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கதை அரசியல் கட்சியாக பதிவு செய்ய அதன் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். இது விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்தது. முழுமையாக அரசியலில் குதித்துவிட்டார் என செய்திகள் வெளியானது. ஆனால் திடீரென விஜய் தலையிட்டு இதற்கும் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என விளக்கினார்.

மீண்டும் விஜய் அரசியல் பிரவேசம்:

பின்னர் தற்போது மீண்டும் விஜய் தரப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் வாசம் அடிக்கிறது. ஆம், அண்மையில் கூட அம்பேதகர் பிறந்தநாள் அன்று அவருடைய சிலைக்கு தன்னுடைய மக்கள் இயக்க நிர்வாகிகள் மூலம் மாலை அணிவித்தார். அண்மையில் கூட, +2 , 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பரிசுத்தொகை வழங்க உள்ளார் நடிகர் விஜய். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது.

இதற்காக மாவட்டம் தோறும் மாணவர்களின் விவரங்களை அனுப்ப விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டார். இதில் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் நகல், ‘ஆதார்’ அட்டை நகல், மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வங்கிக் கணக்கு அட்டை நகல் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றையும் சேகரித்து, வரும் 20ம் தேதிக்குள், சென்னை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என கூறியிருந்தார்கள். .

இதில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்போகிறார். சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறுவதாகவும், அந்த விழாவில் கலந்துக்கொள்பவர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கப்போவதாக திட்டமிட்திருந்தனர். இந்நிலையில் இதற்கான மாணவர்கள் தேர்ந்தெடுப்பதில் குளறுபடி ஏற்பட்டிருப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.

தாம்பரம் தொகுதியில் 10ஆம் வகுப்பில் 492, 491 மதிப்பெண் பெற்றவர்களை தேர்வு செய்யாமல், அதைவிட குறைவான 486 மதிப்பெண்களை பெற்ற மானவர்களை அழைத்து வந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், விஜய் மக்கள் இயக்கம் அவர்களுக்கு முறையான பதில் அளிக்கவில்லை இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல்கள் கூறுகிறது.

Views: - 333

0

0