போட்டியாளர்களை ‘Bye Bye’ மிக்சர் என பதிவிட்ட விஜய் டிவி.. எதிர்பால் நீக்கப்பட்ட பதிவு..!

Author: Vignesh
30 October 2023, 10:09 am

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

bigg boss 7 tamil-updatenews360

இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்‌ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.

bigg boss 7 tamil-updatenews360

இந்த சீசனில் வெகு சீக்கிரத்தில் போட்டியாளர்களுக்கிடையே போட்டியும், மோதலும் உருவாகிவிட்டது. இதில் அனன்யா பாண்டே எலிமினேட் செய்யப்பட்டார். பவா செல்லத்துரை போட்டியில் இருந்து விலகிவிட்டார். அவரைத் தொடர்ந்து விஜய்யும் எலிமினேட் செய்யப்பட்டார்.

bigg boss 7 tamil-updatenews360

பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரம் நேற்றைய பிக் பாஸ் 7 ல் டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. அதில், யுகேந்திரன் மற்றும் வினுஷா ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், ஐந்து வைல்டு கார்டு என்ட்ரி போட்டியாளர்கள் உள்ளே சென்றனர்.

bigg boss 7 tamil-updatenews360

இதுகுறித்து, விஜய் டிவி பதிவிட்ட பதிவில் ‘Bye Bye’ என குறிப்பிட்டு மிக்சர் புகைப்படத்தை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. இது மிகவும் தரைகுறைவான விமர்சனம் என நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த பதிவு நீக்கப்பட்டு விட்டது.

bigg boss 7 tamil-updatenews360
  • Bhuvaneshwari spiritual journey திடீரென ஆன்மிகத்தில் குதித்த கவர்ச்சி நடிகை : இதெல்லாம் ரொம்ப தப்புமா..கவலையில் ரசிகர்கள்..!
  • Views: - 418

    0

    2