நீ என்ன பெரிய ஆளா.. வாடா பாக்கலாம்.. சண்டைக்கு சென்ற விஜயகாந்த்.. பயந்து ஓடிய நிஜ ரவுடிகள்..!

Author: Vignesh
29 December 2023, 11:09 am
vijayakanth---updatenews360
Quick Share

மதுரை மாவட்டம் விருதுநகரில் 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ந் தேதி பிறந்தவர் தான் விஜயகாந்த். இவரது நிஜப்பெயர் விஜயராஜ் சினிமாவிற்காக விஜயகாந்த்தாக மாறினார். தமிழ் சினிமாவில் எந்த சினிமா பின்புலமும், சிபாரிசும் இல்லாமல் தங்களது கடின உழைப்பின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் விஜயகாந்த். பின்னர், தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் தனி இடத்தையும் தமிழ் திரையுலகில் பெற்றார்.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னர் ரைஸ் மில் நடத்திக்கொண்டிருந்த விஜயராஜ், சினிமாவிற்காக விஜயகாந்தாக மாறினார். திறமையான நடிகராக கோலிவுட்டில் கேப்டனாக வலம் வந்த விஜயகாந்த் மிகச்சிறந்த மனிதர் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம் தான். நடிகர் – நடிகைகளுக்கு எந்த ஒரு பிரச்சனை என்றாலும் முன்வந்து உதவி செய்து நேரம் பாராமல் திரைத்துறைக்காக பணியாற்றியவர். யார் மனதையும் நோகடிக்காது, அனைவர்க்கும் நியாயமாக சமமாக நடந்து கொள்வதில் மிகுந்த கவனமாக இருப்பவர் விஜயகாந்த்.

Vijayakanth-1

பெரிய நடிகர், சீனியர் நடிகர் என்ற வித்தியாசம் பாராமல் அனைவரது நிறை குறைகளை அனுசரித்து வேண்டியதை செய்து கொடுத்து வந்தவர். இவரால் பலன் பெற்றவர்கள், பிரபலம் அடைந்தவர்கள் ஏராளம். உடல்நலம் சரியில்லாமல் திரையுலகு மற்றும் அரசியல் பொதுப்பணிகளிலும் பெரிதும் ஈடுபடாமல் இருந்து வரும் விஜய்காந்த் அவர்கள் குறித்து பிரபல நடிகர் நடிகைகள் தங்களது பேட்டிகளில் பலரும் அறிந்திராத அவரது நற்குணங்கள் குறித்து பகிர்ந்துள்ளனர்.

மேலும், சினிமாவை கனவாக கொண்டு வளர்ந்த திறமையான இளம் தலைமுறையினர் பலரை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்த பெருமை விஜயகாந்தையே சேரும். திரைப்பட கல்லூரி பட்டதாரிகளை இயக்குனராக அறிமுகப்படுத்தி உதவி செய்த ஒரே நடிகர் விஜயகாந்த் தான். மேலும் சினிமாவில் வாய்ப்புகள் தேடி வரும் அத்தனை பேரின் பசியை போக்கியவர் விஜயகாந்த். வயிறார சாப்பாடு போட்டு அதில் சந்தோஷப்படக்கூடய ஒரே நல்ல மனிதர் அவர். மேலும் விஜயகாந்தின் படப்பிடிப்புகளில் மட்டும் தான் அசைய உணவுகள் அதிகம் இருக்கும் ஊர்வன , பறப்பன நடப்பன என அனைத்தும் இருக்கும்.

Vijayakanth - Updatenews360

விஜயகாந்த் ராவுத்தர் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தார். அங்கிருந்து தான் சாப்பாடு வரும். விஜயகாந்த் ஷூட்டிங்கிற்கு போனால் வயிறு நிறைஞ்சிடும்பா என சொன்ன நடிகர்கள் பலர் உள்ளனர். அவர் போட்ட சோறு தான் இன்றைக்கும் அவரை வாழவைத்துக்கொண்டிருக்கிறது. எம்ஜியாருக்கும் விஜயகாந்திற்கும் நல்ல நட்பு இருந்தது. மற்ற நடிகர்களின் டீ, காபி கொடுத்தே படம் எடுப்பார்கள். ஆனால், விஜயகாந்த் ஷூட்டிங்கில் ஹார்லிக்ஸ், பூஸ்ட், சூப், அசைவம் , சைவம் என குறையாமல் சாப்பாடு போட்டுக்கொண்டே இருப்பார்கள். அவ்வளவு நல்ல மனம் கொண்ட மனிதர் விஜய்காந்த்த்.

vijayakanth

முன்னதாக, சில வாரங்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் விஜயகாந்த் நேற்று காலை 28 ஆம் தேதி டிசம்பர் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் 71 வயதில் காலமானார். இச்சம்பவம் தேமுதிக கட்சியின் தொண்டர்களையும் விஜயகாந்தின் ரசிகர்கள், பிரபலங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தநிலையில், விஜயகாந்த் குறித்து சுவாரசியமான சம்பவம் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, மைசூரில் தமிழ்ச்செல்வன் என்ற படத்திற்காக சூட்டிங் கலந்து கொண்டிருக்கிறார் விஜயகாந்த். அந்த சமயத்தில், கர்நாடகத்தில் காவிரி விவகாரத்தில் குரல் கொடுத்து வரும் வாட்டாள் நாகராஜ் சில ரவுடிகளுடன் விஜயகாந்த் தங்கி இருந்த கெஸ்ட் ஹவுஸ் முன் வந்து பிரச்சனை செய்து கொண்டிருந்திருக்கிறார். படத்தில் கீப்போர்ட் தமிழில் இருக்கிறது என சொல்லி எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றன. அப்போது, நடிகர் விஜயகாந்த் இரும்பு ராடை கையில் எடுத்துக்கொண்டு நேராக அவர்களிடம் சண்டைக்கு சென்று இருக்கிறார். நீ என்ன பெரிய ஆளா வாடா பாக்கலாம் என விஜயகாந்த் நேராக சென்று சத்தம் போட அங்கிருந்த வாட்டாள் நாகராஜ் மற்றும் அவரது ரவுடிகள் தலைதெறிக்க ஓடிவிட்டார்களாம். இந்த விஷயத்தை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா சில மாதங்களுக்கு முன்பு பேட்டியில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Views: - 239

0

1