மஞ்சுளாவுக்கு துரோகம் செய்த விஜயகுமார் – வனிதா கேட்டதில் தப்பே இல்லை!

Author: Rajesh
23 February 2024, 2:32 pm

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான விஜயகுமார் தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். 1961ல் வெளிவந்த சிறீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்து இவர் சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Vijayakumar-Manjula-updatenews360

குறிப்பாக மிகவும் கௌரமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார். முத்துக்கண்ணு என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட இவர் அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். முதல் மனைவி முத்துக்கண்ணுவுக்கு பிறந்தவர்கள் தான் அனிதா, கவிதா, அருண் விஜய் இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு பிறந்தவர்கள் ப்ரீதா, வனிதா, ஸ்ரீதேவி.

இந்நிலையில் விஜயகுமார் தனது முதல் மனைவிக்கு பெரிய துரோகம் செய்ததாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதாவது, மஞ்சுளா திரைத்துறையில் நட்சத்திர நடிகையாக ஜொலித்தவர். அவர் படங்களில் நடித்து பல கோடி சொத்து சேர்த்து வைத்திருந்தார். மஞ்சுளாவின் மனதை மயக்கி மறுமணம் செய்துக்கொண்ட விஜயகுமார் அவரின் சொத்துக்களில் ராஜ வாழ்க்கை வாழ்ந்தார். ரஜினிகாந்த்தை வைத்து “கை கொடுக்கும் கை” படம் தயாரிப்பதற்காக “குட் லக்” தியேட்டரை விற்றார் விஜயகுமார்.

அது மட்டுமில்லாமல் தனது முதல் மனைவி முத்துக்கண்ணுவின் மகள்களை மட்டும் மருத்துவம் படிக்க வைத்த விஜய்குமார் மஞ்சுளாவுக்கு பிறந்த மூன்று மகள்களையும் படிக்க வைக்கவில்லை. அவர்களை படங்களில் நடிக்க வைத்து அதிலும் பணம் பார்த்தார். இது துரோகம் இல்லையா? ஒரு கண்ணில் வெண்ணையையும், மறுகண்ணில் சுண்ணாம்பையும் வைத்துக்கொண்டவர் விஜய்குமார் என்றார் பயில்வான் ரங்கநாதன். ஒரு மனைவியின் சொத்துக்களை அழித்து இன்னொரு மனைவியை வாழவைப்பது எவ்வளவு பெரிய துரோகம். வனிதா அப்படி சண்டை போட்டு சொத்து கேட்டதில் தப்பே இல்லை என நெட்டிசன்ஸ் பலர் கருத்து கூறி வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!