இணையத்தில் லீக்கான “லியோ” திரைப்படம்… ஆர்வக்கோளாறுகளால் அப்செட் ஆன ஆடியன்ஸ்!

Author: Shree
19 October 2023, 11:07 am
leo movie
Quick Share

விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் இன்று 19ஆம் தேதிக்கு திரைக்கு வந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். லியோ படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து பல்வேறு தடங்கல்களை சந்தித்து வருகிறது.

டிரெய்லர் வெளியீட்டின் போது ரோகிணி தியேட்டரில் இருக்கைகளை ரசிகர்கள் உடைத்து சேதப்படுத்தியது, இசை வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது என பல்வேறு தடைகள் ஏற்பட்டன. அதுமட்டுமில்லாமல், லியோ படத்திற்கு அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கு சிறப்பு காட்சிகளை திரையிட அனுமதிக்க வேண்டும் என்ற படக்குழுவின் கோரிக்கையை அடுத்தடுத்து தமிழக அரசு நிராகரித்தது.

இதனால், இன்று முதல் 24ம் தேதி வரையிலான 5 நாட்களுக்கு 5 காட்சிகளை வெளியிட மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இப்படி பல்வேறு பிரச்சனைகளை கடந்து வந்துள்ள லியோ திரைப்படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்தோடு வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில் சில ஆரவாக்கோளாறுகள் முதல் காட்சியை பார்த்துக்கொண்டே டைட்டில் முதல் கிளைமாக்ஸ் வரை படத்தின் முக்கியமான சீன்களை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

இது படம் இன்னும் பார்க்காத மற்றும் படம் பார்க்க காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களை கடுங்கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. முன்னதாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், லியோ படத்தின் முதல் பத்து நிமிடமும், கிளைமாக்ஸ் காட்சிதான் மாஸ் என்று கூறியிருந்தார். குறிப்பாக அந்த காட்சியை கூட போனில் படம்பிடித்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு செம டென்சன் ஆகியுள்ளனர் சில ஆர்வக்கோளாறுகள். இப்படி வெளியிட்டால் படம் பார்க்க வருபவர்களின் சுவாரஸ்யம் போய்விடும் என பலர் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

Views: - 269

0

0