ரிலீஸ் ஆகி 11 வருஷம் ஆகுது… துப்பாக்கி படத்தின் மொத்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?

Author: Shree
13 November 2023, 2:52 pm

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பாக்கி. இப்படத்தில் விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இப்படத்திற்கு ஏ. ஆர். முருகதாஸின் உதவி இயக்குனர் கதையை இயக்கியிருந்தார்.

இராணுவத்தில் வேலை செய்யும் விஜய் விடுமுறைக்கு மும்பைக்கு வருகிறார். அங்கே பெண் பார்ப்பது, முதலில் மோதல், பிறகு காதல் என காட்சிகள் நகர, திடீர் என வெடிக்கிறது ஒரு வெடிகுண்டு. வெடிகுண்டை வைத்தவன் விஜய்யிடம் சிக்க, அவனது திட்டங்களைத் தெரிந்து சதிகளை முறியடிக்கிறார். கோபமடைந்த தீவிரவாதி தலைவன் விஜய்யையும், விஜய் தீவிரவாதி தலைவனையும் தேட, கடைசிக் காட்சியில் இருவரும் சந்திக்கின்றனர். விஜய் தீயவனை அழிக்கிறார்.

இந்த படம் ஆக்ஷன் காட்சிகளுடன் காதல், ரொமான்ஸ், குடும்ப செண்டிமெண்ட் என அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்தது. இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. அப்போதே அதன் வசூல் சுமார் ரூ. 120 கோடியை தாண்டியதாக பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் செய்தி வெளியிட்டுள்ளது. இது வியக்கத்தக்க விஷயமாக சினிமா வட்டாரத்தில் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?