பா .ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் தங்கலான்.இதில் விக்ரம் தன்னுடைய அசுர நடிப்பில் மிரட்டி இருந்தாலும் மக்கள் பெரிதாக இப்படத்தை கொண்டாடவில்லை,வழக்கம் போல விக்ரமுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்நிலையில் தற்போது சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
நடிகர் விக்ரமுடைய படங்கள் என்றாலே அதில் அவருடைய கடின உழைப்பும்,நடிக்கிற விதமும் தனித்துவமாக இருக்கும்.
இதையும் படியுங்க: குடியால் சேர்ந்த நட்பு.. துரோகம் செய்த இளையராஜா ..அதிர்ச்சியில் ரஜினி
இந்நிலையில் வீர தீர சூரன் பாகம் 2 படத்திலும் தன்னுடைய முழு உழைப்பை போட்டு நடித்திருக்கிறார். ஜனவரி மாதம் பொங்கல் அன்று படம் வெளியாகும் என்ற தகவல் இருந்த நிலையில்,ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் 2025 ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வருகின்ற காரணத்தால் வீர தீர சூரன் பாகம் 2 படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் நடிக்கிற ஹீரோவின் படங்களுக்கு தமிழ்நாட்டிலே மரியாதையில்லை என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்