“Tasmac-ah..? இது அந்த படத்துக்கு போட்ட Set-யா”.. குடிமகன்களை விரட்டி அடித்த விஷால்..! (வீடியோ)

Author: Vignesh
17 January 2024, 5:09 pm
vishal - updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். திரைப்பட தயாரிப்பாளரும் கூட… தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் இளைய மகன் விஷால் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்தார். ஆக்‌ஷன் படங்களில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர், அவர் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியின் கீழ் படங்களைத் தயாரிக்கிறார்.

vishal

அர்ஜுனிடம் உதவி இயக்குநராகத் திரையுலகில் நுழைந்த விஷால் பின்னர் அவர் ஒரு நடிகரானார். செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்தார். படமும் வெற்றி பெற்றது. பின்னர் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி மற்றும் மலைக்கோட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்தார். பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்த தொடர்ச்சியான படங்களைத் தொடர்ந்து, விஷால் தனது சொந்த தயாரிப்பு ஸ்டுடியோவை உருவாக்கினார்.

பின்னர் பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் மற்றும் பூஜை போன்ற லாபகரமான முயற்சிகளைத் தயாரித்து வேலை செய்துள்ளார். விஷால், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக அக்டோபர் 2015 இல், முந்தைய கமிட்டிக்கு எதிராக ஒரு இயக்கத்தைத் தொடங்கிய பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்ச்சைகளில் சிக்கிய விஷால் மீது பல விமர்சனங்களும் எழுந்தன. 45 வயதை எட்டியும், இன்னும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் விஷால். பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

விஷால் குறித்து சமீபத்தில் ஒரு வீடியோ இணையதளத்தில் லீக் ஆகியது. அமெரிக்காவில் ஒரு பெண் உடன் சுற்றிய வீடியோ வைரல் ஆன நிலையில் அது பிராங்க் என அவர் பின்னர் விளக்கம் கொடுத்தார்.

இந்த நிலையில், தான் விஷாலின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதாவது, ரத்தினம் படத்திற்காக டாஸ்மாக் செட் போட்டு இருக்கிறார்கள். அது தெரியாமல் சிலர் மது வாங்க வரிசையில் நின்று இருக்கிறார்கள். அவர்களிடம் வந்து இது நிஜ டாஸ்மார்க் கடை இல்லை செட் என்று கூறி அடித்து துரத்தி உள்ளார் விஷால். அப்போது, எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது. அதை பார்த்தார்களோ ஒரு வருங்கால சட்டமன்ற உறுப்பினர் என்பதை விஷால் நிருபித்துவிட்டார் என்று கூறி வருகின்றனர்.

Vishal

மேலும், அந்த வீடியோவை பார்த்தாலே அது படத்திற்கான பிரமோஷன் வீடியோ போல் தெரிகிறது என்றும், விஷால் விரட்டியடிப்பதும் ஓடியவர்களை பார்த்தால் நிச்சயம் குடிமகன் போல் தெரியவில்லை. துணை நடிகர்கள் போன்று இருக்கிறார்கள். ரத்தினம் படப்பிடிப்பு துவங்கியதிலிருந்து விஷால் இப்படியாகத்தான் எதையாவது ஒரு குறும்புத்தனம் செய்து கொண்டிருக்கிறார். அதனால், இந்த வீடியோவும் நிஜமல்ல என்று நம்பப்படுகிறது.

Views: - 190

0

0