மினி தியேட்டர், சரக்கு பார்ட்டிக்கே ஒரு அறையில் பார் செட்.. சகல வசதிகளுடன் VJ மகேஸ்வரியின் பிரம்மாண்ட வீடு…!

Author: Vignesh
10 May 2024, 4:19 pm
vj maheshwari
Quick Share

தமிழ் சினிமாவின் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவரான விஜே மகேஸ்வரி ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி பிரபலம் ஆகினார். அதன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் தேடி வந்தது.

vj maheshwari - updatenews360

விக்ரம், மகான், சாணி காகிதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவரது ரோல் பிரபலமானதாக பார்க்கப்பட்டது. தொடர்ந்து கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்துக்கொண்டே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இதனிடையே இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டு மக்களிடையே பேமஸ் ஆனார்.

தற்போது 36 வயதாகும் மகேஸ்வரி திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்பது அனைவரும் அறிந்ததே. இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். கணவரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்ந்து வரும் மகேஸ்வரி தற்போது தனது இரண்டாம் திருமண ஆசை குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதாவது,

“எனக்கும் சில தேவைகள் இருக்கு. ஆனால் இரண்டாம் திருமணம் செய்துக்கொள்ள மிகவும் பயமாக இருக்கிறது. காரணம்,வருகிற நபர் எனக்கு கணவராக இருப்பார். ஆனால், அவர் என் மகனுக்கு அப்பாவாக மாறக்கூடிய மனநிலையில் இருப்பாரா? இதெல்லாம் உண்மையிலே நடக்குமா? என்ற பயம் எனக்கு இருக்கிறது.

மேலும் படிக்க: துளி கூட Makeup இல்லாமல் இருக்கும் ரம்யாகிருஷ்ணன்.. என்ன அழகு டா; இவங்களுக்கு 53 வயதா?.. (Video)

ஏனென்றால், என் மகன் என்னை நம்பி தான் இருக்கிறான். என்னை மறுமணம் செய்துக்கொள்ள இரண்டு பேர் கேட்டார்கள். திருமணம் செய்துக்கொள்ள விருப்பத்தையும் தெரிவித்தார்கள்.ஆனால் ஏற்கனவே என் திருமணம் தோல்வியில் முடிந்துவிட்டதால் மறுமணம் என்பது சரியாக வருமா?என பெரும் குழப்பம் மனதில் உள்ளதாக அவர் கூறினார்.

vj-maheswari

மேலும் படிக்க: கோடி ரூபாய் கொடுத்தாலும் NO.. இந்த விஷயத்தில் கறார் காட்டும் சாய் பல்லவி..!

மேலும், கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிடுவதற்கான காரணத்தை கூறிய அவர் தனக்கு சிறுவயதில் இருந்து அழகான ஆடை அணிவது மிகவும் விருப்பம் இருக்கிறது. எனக்கு நயன்தாரா மிகவும் பிடிக்கும் அவர்களை மாதிரி நானும் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இனி நான் வாழப் போகும் காலகட்டத்தில் எனக்கு பிடித்ததை செய்யவே விரும்புகிறேன் என்று மகேஸ்வரி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், மகேஸ்வரியின் பிரம்மாண்ட வீடு பற்றிய தகவல் இணையதளத்தில் பரவி வருகிறது. மூன்று லட்சம் மதிப்பிலான வாஸ்து மீன், மினி தியேட்டர் விலை உயர்ந்த சோபா மேஜை, விலை உயர்ந்த அலங்கார பொருட்கள், உள்ளிட்ட பல பொருட்கள் அதிக விலைக்கு வாங்கி வைத்திருக்கிறாராம். மேலும், நண்பர்களுக்கு மதுபார்ட்டி வைக்க ஒரு அறையில் சரக்கு பாட்டில்களுடன் ஒரு ரேக் வைத்திருக்கிறார். மகேஸ்வரி ஐபிஎல் பார்க்கவும் சரக்கு பார்ட்டி வைக்கவும் இந்த அறையை பயன்படுத்தி கொள்வாராம். சரக்கு பார்ட்டி இருக்கும்போது மட்டும் மகனுக்கு இங்கே அனுமதி இல்லை என்று விஜே மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Views: - 122

0

0

Leave a Reply