காசுக்காக மட்டமாக நடந்து கொண்ட கவுண்டமணி.. இனிமே உன் மூஞ்சில கூட முழிக்க மாட்டேன் சபதம் எடுத்த கங்கை அமரன்..!

Author: Vignesh
28 April 2023, 3:02 pm
gangai-amaran-goundamani -updatenews360
Quick Share

கங்கை அமரன் இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று பன்முகத்திறமையை சரியாக பயன்படுத்தி புகழின் உச்சிக்கு சென்றவர். ,இவர் இடையில் இளையராஜாவுடன் ஏற்பட்ட பிரச்சனையால் சினிமாவில் இருந்து சிலகாலம் விலகியும் அண்ணன் மூஞ்சியில் கங்கை அமரன் 14 ஆண்டுகளுக்கும் மேல் முழுக்காமல் இருந்து வந்தார்.

சமீபத்திய பேட்டிகளில் பண விசயத்தில் கங்கை அமரன் தான் பட்ட கஷ்டத்தை கூறி வந்தார். கங்கை அமரன் எழுத்தாளராகவும் இயக்குனராகவும் 20 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி உள்ளார்.

Gangai Amaran - updatenews360

அந்த படங்களில் குறிப்பாக காமெடி நடிகர் கவுண்டமணி கண்டிப்பாக நடித்தும் உள்ளார். மேலும், பல படங்களில் கவுண்டமணிக்கு வாய்ப்பு கொடுத்த கங்கை அமரனை காசுக்காக அவமானப்படுத்தியும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோயில் காளை என்ற படத்தில் ராமசாமி கதாபாத்திரத்தில் கவுண்டமணி நடித்து இருந்தார். அந்த படத்தின் போது பணப்பிரச்சனையில் இயக்குனர் கங்கை அமரன் இருந்தாராம். தன்னுடைய சம்பளம் அவரின் கஷ்டத்தால் வராமல் போய்விடுமோ என்று நினைத்த கவுண்டமணி, தனக்கு கொடுக்க வேண்டிய சம்பள பணத்தை கொடுங்கள் என்று கறராக கேட்டு உள்ளார்.

gangai-amaran-goundamani -updatenews360

முன்னதாக, கவுண்டமணி சம்பள விசயத்தில் கொஞ்சம் கண்டிப்புடன் இருக்கக்கூடியவர் என்பதால் பணம் வராதோ வருமோ என்ற சந்தேகத்தில் நடித்து முடித்தப்பின் பணம் கேட்டு உள்ளார். அப்படி சம்பளம் கொடுக்கவில்லை என்றால் நான் டப்பிங் வரமாட்டேன் என்று மேனேஜர் மூலம் தெரிவித்தும் இருக்கிறார்.

எப்படியாவது சீக்கிரம் படத்தை வெளியிட்டு சம்பளத்தையும் கங்கை அமரன் கொடுத்து இருக்கிறார். பல வாய்ப்புகளை கொடுத்த கங்கை அமரனை காசுக்காக இப்படி அவமானப்படுத்தியதை நினைத்து கங்கை அமரன் பெரிதும் வருத்தப்பட்டு இருக்கிறார்.

vijaykanth-updatenews360

அதிலிருந்து இன்று வரை கவுண்டமணியின் மூஞ்சியில் முழிக்காமல் இருந்து வருகிறாராம் கங்கை அமரன். ஆனால், அந்த படத்தில் நடித்த விஜயகாந்த், நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம், கவலைப்படாதீர்ங்க என்றும் பணம் விசயம் சரியாகிவிடும் என்று ஆறுதலாக பேசியதாக கங்கை அமரன் தெரிவித்து இருக்கிறார்.

Views: - 458

7

1